Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th October 2024

Daily Current Affairs

Here we have updated 5th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தனிப்பெருங்கருணை தினம்

Vetri Study Center Current Affairs - Special Mercy Day

  • அக்டோபர் 5 ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை தினமாக (வள்ளலார் பிறந்த தினம் ) கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்வாணன்

  • தமிழ்நாடு SC/ST ஆணையத்தின் தலைவராக தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவரின் பதவிக்காலம் – 3 ஆண்டுகள் (or) 75 வயது.
  • இது ஒரு அரசியல் அமைப்பு சார்ந்த ஆணையம் அல்ல. சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பே.
  • தமிழ்நாடு SC/ST ஆணையம் – 2021

மணிமேகலை விருது

  • சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.

கருணை மரணம்

  • இயற்கையான கருணை மரணம் பற்றி வரைவு வழிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • 2018-ல் உச்சநீதிமன்றம் இயற்கையான கருணை மரணத்தை (Passive Euthanasia) சட்டப்பூர்வமாக்கியது.
  • இயற்கை மரணம் குறித்த வழக்கு – அருணா சண்பாக் (2018)

புவிசார் குறியீடு (GI Tag)

  • அசாம் மாநிலத்தின் மைபாரா ஜூ பித்வி என்னும் ஜூஸ்-க்கு (பழச்சாறு) புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  • GI Tag (Geographical Indication) – 1999

பிரதமரின் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்

  • பிரதமரின் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நிதியுதவி திட்டங்களையும் ஒன்றிணைக்கவும் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிருஷோன்னதி திட்டம்

  • கிருஷோன்னதி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது.
  • உணவு பாதுகாப்பில் தன்னிறைவு அடைய இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

SATHI வலைதளம்

  • தரமான விதைகள் மாநிலங்களுக்கு கிடைக்க SATHI வலைதளம் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டியோகோ கார்சியா ராணுவதளம்

  • இங்கிலாந்திற்கு சொந்தமான டியோகோ கார்சியா ராணுவதளத்தை தவிர சாகோஸ் தீவுகளை மொரிஷியஸ் நாட்டிற்கு வழங்கியுள்ளது.
  • சாகோஸ் தீவுகளில் டியோகோ கார்சியா ராணுவதளம் அமைந்துள்ளது.

வெள்ளி கிரக ஆய்வு

  • வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய வீனஸ் விண்கலம் 28 மார்ச் 2028-ல் விண்ணில் ஏவப்படுமென இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முதல் பெண் அதிபர்

Vetri Study Center Current Affairs - Claudia Sheinbaum

  • மெக்சிக்கோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • தாய்லாந்து பெண் அதிபர் – பேடோங்டர்ன் ஷினவத்ரா
  • இத்தாலி பெண் அதிபர் – ஜார்ஜியா மெலோனி
  • ஐஸ்லாந்து பெண் அதிபர் – ஹல்லா டோமஸ்டோட்டிர்

முக்கிய தினம்

உலக ஆசிரியர் தினம் (World Teacher’s Day) அக்டோபர் – 5

  • தேசிய ஆசிரியர் தினம் – செப்டம்பர் 5

தேசிய வனவிலங்கு வாரம் (National Wild Animal Week) அக்டோபர் 2-8

தேசிய விண்வெளி வாரம் (National Space Week) அக்டோபர் 4-10

  • தேசிய விண்வெளி தினம் – ஆகஸ்ட் 23

தமிழக அரசின் திட்டங்கள்

முதல்வரின் தாயுமானவர் திட்டம் – 2024

முதல்வரின் காலை உணவுத் திட்டம் – 15.9.2022

Related Links

Leave a Comment