Daily Current Affairs
Here we have updated 5th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அமர்நாத் ராமகிருஷ்ணா
- இந்திய தொல்லியல் துறை இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
- அகழாய்வு பணிகள் மூலம் கீழடியை உலகம் அறிய முக்கிய காரணமாக திகழந்தவர்.
சோலுங் திருவிழா
- அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள ஆதி எனும் பழங்குடியினரால் சோலுங் திருவிழா கொண்டாடப்பட்டது.
கட்சித் தாவல் தடை சட்டம்
- கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒய்வூதியம் கிடையாதென இமாச்சலப்பிரதேசத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- அரசியலமைப்பு திருத்தம் 52வதின் படி கட்சி தாவல் தடை சட்டம் 1985-ல் உருவாக்கப்பட்டது.
- கட்சி தாவல் தடை சட்டம் பத்தாவது அட்டவணையில் உள்ளது.
- 91வது அரசமைப்புச் சட்டதிருத்தம், 2003ன் படி கட்சி பிளவுறும் சூழலில் கட்சித் தாவலின் அடிப்படைகள் பொருந்தாது.
நம்பிக்கை நக்சே திட்டம்
- கர்நாடக மாநிலத்தில் நிலம் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்காக நம்பிக்கை நக்சே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வேத 3டி அருங்காட்சியகம்
- இந்தியாவின் வேத 3டி அருங்காட்சியகமானது உத்திரபிரதேசத்தின் வாரணாசியில் நிறுவப்பட உள்ளது.
பொருளாதார வளர்ச்சி
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7%மாக இருக்குமென உலக வங்கி கணித்துள்ளது.
பாராலிம்பிக்
- ஆடவருக்கான வில்வித்தை போட்டியில் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்றுள்ளளார்.
- வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற முதல் வீரர்
- க்ளப் த்ரோ போட்டியில் தரம்பிர் தங்கமும், பிரனாவ் சூர்யா வெள்ளியும் வென்றுள்ளனர்
முக்கிய தினம்
தேசிய ஆசிரியர் தினம் (National Teacher’s Day) – செப்டம்பர் 5
- கருப்பொருள்: Empowering educations for sustainable future
- 1962 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
வ.உ.சி பிறந்த தினம் – செப்டம்பர் 5
- 1906இல் தூத்துக்குடியில் வ. உ. சி. சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.
- இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.
- திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார்.