Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th February 2024

Daily Current Affairs

Here we have updated 6th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 24

Vetri Study Center Current Affairs - International Mathematics Conference

  • பிப்ரவரி 8-10 வரை சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 24 நடைபெற உள்ளது.
  • தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy) இம்மாநாட்டை நடத்துகிறது.

மக்களைத் தேடி ஆய்வகம் சேவை திட்டம்

Vetri Study Center Current Affairs - makkalai Thedi Aaivagam Sevai

  • நாகர்கோவில், தொல்லவிளை நகர்புற ஆரம்பர சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி ஆய்வகம் சேவை திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • துவங்கி வைத்தவர் : மா.சுப்பிரமணியன் (தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர்)
  • நோக்கம் : ஆரம்பர சுகாதார நிலையங்களில் 63 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ளல்

ONDC-யில் இணைவு

  • மெட்ரோ இரயில் பயணச்சீட்டினை எந்தவொரு செயலியிலும் பெற்றுக் கொள்ள சென்னை மெட்ரோ ரயில் சேவையானது ONDC-யில் இணைந்துள்ளது.
  • ONDC-யில் இணைந்துள்ள முதல் மெட்ரோ ரயில் சேவை ஆகும்.
  • ONDC – Open Network for Digital Commerce

உத்திரகாண்ட்

  • பொதுசிவில் சட்ட மசோதவை உத்திரகாண்ட் மாநிலம் நிறைவேற்ற உள்ளது.
  • பொதுசிவில் சட்டம் – விதி 44
  • ஏற்கனவே கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் இருந்து வருகிறது.

இந்திய எரிசக்தி வாரம் 2024

Vetri Study Center Current Affairs - India Energy Week 2024

  • பிப்ரவரி 6-9 வரை கோவாவின் பானாஜியில் இந்திய எரிசக்தி வாரத்தின் இரண்டாவது பதிப்பு நடைபெற உள்ளது.
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு மற்றும் இந்திய பெட்ரோலிய தொழிற் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகிறது.

TRAI – புதிய தலைவர்

Vetri Study Center Current Affairs - World Cancer Day

  • இந்திய தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையத்தின் (TRAI) தலைவராக அனில் குமார் லஹோட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • TRAI – Telecom Regulatory Authority of India – 1997
  • தலைமையகம் – டில்லி

அபூர்வ சந்திரா

  • இந்தியாவின் சுகாதாரத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

66வது கிராமி விருது – லாஸ் ஏஞ்சலஸ்

Vetri Study Center Current Affairs - Corruption Perceptions Index

  • இந்தியாவின் சக்தி இசைக்குழுவிற்கு உயரிய கிராமி விருதானது கிராமி ஆல்பம் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.
  • கிராமி விருது என்பது இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதாகும்.
  • சக்தி இசைக்குழுவில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கியுள்ளன.

கடற்படை குடிமக்களின் ஆண்டு

  • 2024-ஆம் ஆண்டை இந்திய கடற்படையானது கடற்படை குடிமக்களின் ஆண்டாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2024-ஆம் ஆண்டை இந்திய ராணுவம் தொழில்நுட்பத்தை உறிஞ்சும் ஆண்டாக அறிவித்துள்ளது.

சதா தன்ஷிக் (Sada Tanseeq)

  • இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையேயான முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியானது ராஜஸ்தானின் மகாஜனில் நடைபெற்றுள்ளது.

ஒலேக் கொனோனென்கோ

Vetri Study Center Current Affairs - Oleg Kononenko

  • ரஷ்யா நாட்டின் விண்வெளி வீரரான ஒலேக் கொனோனென்கோ விண்வெளியில் அதிக நேரம் பயணித்து உலகச்சாதனை படைத்துள்ளார்.
  • இவர் 878 நாட்கள் 12 மணிநேரம் பயணம் செய்துள்ளார்
  • ஜெனடி படல்கா 878 நாட்கள் 11 மணிநேரம் 29 நிமிடம் பயணம் செய்துள்ளதே சாதனையாக இருந்து வந்துது.

டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift)

  • 4 வது முறையாக கிராமி விருது வென்ற பாடகி என்ற பெருமையை அமெரிக்க பாடகியான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) பெற்றுள்ளார்.
  • இவர் மிட் நைட்ஸ் என்ற ஆல்பத்திற்கான சிறந்த பாடகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ய சகிப்புதன்மை சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation) – பிப்ரவரி 06

Vetri Study Center Current Affairs - International Day of Zero Tolerance for Female Genital Mutilation

  • கருப்பொருள்: Her Voice, Her Future

பாதுகாப்பான இணைய தினம் (Safer Internet Day) – பிப்ரவரி 06

Vetri Study Center Current Affairs - Safer Internet Day

  • ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் செவ்வாய் கிழமைகளில் அனுசரிக்கப்படுகிறது.

February 3 Current AffairsFebruary 4th-5th Current Affairs 

Related Links

Leave a Comment