Daily Current Affairs
Here we have updated 6th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அகழாய்வு
- வெம்பக்கோட்டை (விருதுநகர்) அகழாய்வில் மெருகேற்றும் கல் கண்டறியப்பட்டுள்ளது.
- பொற்பனைகோட்டை (புதுக்கோட்டை) அகழாய்வில் எலும்பிலான கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சூழல் மன்றங்கள்
- பள்ளி மாணவர்களுக்கு காலநிலை கல்வியை வழங்க சூழல் மன்றங்கள் (Eco Clubs) தொடங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
AI பல்கலைக்கழகம்
- இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் மும்பையில் (மகாராஷ்டிரா) Universal AI University என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் முதல் AI பள்ளி – கேரளா
- இந்தியாவின் முதல் AI ஆசிரியர் – கேரளா
திட்டம் 3000
- இரயில்வே துறையில் திட்டம் 3000 தொடங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 3000 மில்லியன் டன் சரக்கு பரிமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பேச்சு சுதந்திரம்
- நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் சிறப்பு உரிமைகளை பாதுகாக்கும் சட்டப்பிரிவு – 105
தொடர்புடைய செய்திகள்
- பேச்சுரிமை – விதி 19
மதமாற்ற எதிர்ப்பு மசோதா
- சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
தற்காலிக நீதிபதி
- பணியிலிருக்கும் நீதிபதியை போன்றே தற்காலிக நீதிபதிக்கும் அதிகாரம், சிறப்புரிமை போன்றவைகளும் உண்டு என விதி 224A கூறுகிறது.
- இந்த திருத்தம் 15வது சட்டத்திருத்ததில் கொண்டு வரப்பட்டுள்ளது.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர ஒய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றன.
- உயர்நீதிமன்ற தற்காலிக நீதிபதி நியமனம் – 224
- உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி நியமனம் – 223
தொடர்புடைய செய்திகள்
- 15-வது திருத்தச்சட்டம் 1963 – உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 60 முதல் 62 ஆண்டுகள் வரை அதிகரித்தது.
- உச்சநீதிமன்ற இடைக்கால நீதிபதி – விதி 127
சக்தி வாய்ந்த நாடு
- உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியிலில் இந்தியா 12வது இடத்தை பிடித்துள்ளது.
- முதலிடம் – அமெரிக்கா
- இரண்டாமிடம் – சீனா
- மூன்றாமிடம் – ரஷ்யா
உலக அழகி
- 2025ம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி பட்டத்தை ஷீகோ கெய்லி (Tshego Gaelae) வென்றுள்ளார்.
- இப்பட்டத்தை வென்றுள்ள முதல் கருப்பின பெண் ஆவார்.
வர்த்தகப்போர்
- அமெரிக்கா-சீனா வர்த்தக போரால் இந்தியாவின் ஏற்றுமதியாளர் பயன் பெற உள்ளனர்.
- அமெரிக்கா சீன பொருட்களுக்கு 10% வரியும், சீனா அமெரிக்க பொருட்களுக்கு 15% வரியும் விதித்துள்ளதால் வர்த்தகப் போர் ஆரம்பித்துள்ளது.
விலகல்
- சீனாவின் பெல்ட் அண்டு ரோடு திட்டத்திலிருந்து பனாமா நாடானது விலகியுள்ளது.
- பெல்ட் அண்டு ரோடு திட்டம் – 2013
முக்கிய தினம்
பெண் பிறப்புறுப்பு சிதைத்தலின் பூஜ்ஜிய சகிப்பு தன்மைக்கான தினம் – பிப்ரவரி 6
- கருப்பொருள்: Step up the Pace