Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th July 2024

Daily Current Affairs

Here we have updated 6th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அகழாய்வு கண்டுபிடிப்பு

  • விருதுநகர், வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3வது கட்ட அகழாய்வியல் நாயக்கர் கால செப்பு நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 16ஆம் நூற்றாண்டை சார்ந்த வீரப்பநாயக்கர்  (மதுரை) காலத்தை சேர்ந்தது.

GSDP

  • இந்தியாவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) தமிழகம் (ரூ.31.55 கோடி) இரண்டாம் இடம் வகிக்கிறது.
  • முதலிடம் – மகாராஷ்டிரா
  • மூன்றாமிடம் – கர்நாடகா
  • GSDP – Gross State Domestic Product

முதல் தமிழ் எம்.பி.

Vetri Study Center Current Affairs - Uma Kumaran

  • பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் ஸ்டார்ட்போடுவின் போ தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த உமா குமரன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் தமிழகத்தை சேர்ந்த முதல் தமிழ் எம்.பி. ஆவார்

ராம்சார் தளங்கள்

  • பீகாரிலுள்ள நாகி பறவைகள் சரணாலயம் மற்றும் நக்தி பறவைகள் சரணாயலயம் புதிய ராம்சார் தளங்களாக இணைக்ககப்பட்டுள்ளது.
  • தற்போது இந்தியாவில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 82ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராம்சார் தளங்கள் பட்டியலில்

  • முதலிடம் – இங்கிலாந்து (175)
  • இரண்டாம் இடம் – மெக்சிக்கோ (144)
  • மூன்றாம் இடம் – இந்தியா, சீனா (தலா 82)

முக்கிய மந்திரி நிஜூத் மொய்னா திட்டம்

  • இளம் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கவும், இளம் வயது திருமணங்களை தடுக்கவும் அசாம் மாநிலத்தில் முக்கிய மந்திரி நிஜூத் மொய்னா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜிமெக்ஸ் (Jimex 2024)

Vetri Study Center Current Affairs - Jimex

  • ஜப்பானின் யோகோசுகா என்னுமிடத்தில் ஜப்பான்-இந்தியா இடையே 8வது கடல்சார் பயிற்சியானது ஜிமெக்ஸ் (Jimex 2024) எனும் பெயரில் நடைபெற்றுள்ளது.
  • இந்தியா சார்பில் ஐ.என்.எஸ் சிவாலிக் கப்பல் பங்கேற்றுள்ளது.

புதிய கல்பாசி வகை

  • அருணாச்சலப்பிரதேசத்தில் ஆப்பிரிக்க ஊதா நிறத் தாவரக்குடும்பத்தின் அங்கமான புதிய கல் பாசி தாவர வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இதற்கு இந்திய தாவரவியல் முன்னோடி டாக்டர் இ.கே.ஜானகியம்மாள் நினைவாக டிடிமோ கர்பஸ் ஜானகியே (Didymocarpus Janakiae) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • உலகில் 111 பாசி வகை இனங்கள் உள்ளன. இந்தியாவில் 27 பாசி வகை இனங்கள் உள்ளன.

கியெர் ஸ்டார்மர்

  • பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கியெர் ஸ்டார்மர் வெற்றி பெற்று பிரதமராகியுள்ளார்.
  • மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 28பேர் வெற்றி பெற்றுள்ளனர்

இலக்கு நிர்ணயம்

  • WPV1 வைரஸினை ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் (WHO) 2026-ஐ இலக்காக நிர்ணயித்துள்ளது.
  • தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் பரவி வருகிறது.
  • WPV1 Wild Polio Virus-1

தொடர்புடைய செய்திகள்

 

  • WHO (World Health Organization) – 07.04.1948
  • தலைமையகம்-  ஜெனீவா, சுவிட்சர்லாந்து

முக்கிய தினம்

சர்வதேச கூட்டுறவு தினம் (International day of Cooperatives)

  • ஆண்டுதோறும் ஜூலை முதல் சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
  • கருப்பொருள்: Cooperatives build a better future for all.

World Zoonoses Day

  • லூயிபாஸ்டரால் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி கண்டறியப்பட்டதற்கான நாள்
  • கருப்பொருள்: Preventing the spread of zoonotic diseases.

Related Links

Leave a Comment