Daily Current Affairs
Here we have updated 6th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஒரே நாடு ஒரே பதிவு
- தேசிய மருத்துவ ஆணையமானது (NMC) மருத்துவர்களுக்கான தனி அடையாள எண் வழங்கும் ஒரே நாடு ஒரே பதிவு என்ற பெயரில் கொண்டு வந்துள்ளது.
- NMC – National Medical Council
செயலிகளுக்கு தடை
- மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்ட விரோத சூதாட்ட தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தேர்தல்
- மிஸேராம் (40 பேரவைத் தொகுதி), சத்தீஸ்கரில் (20 பேரவை தொகுதிகளில் முதற்கட்டத தேர்ல்) நாளை தேர்தல் நடைபெற உள்ளது
கேரளா
- உலகாளவிய பொறுப்பு சுற்றுலா 2023 விருதினை கேரள மாநிலம் வென்றுள்ளது.
மும்பை, மகாராஷ்டிரா
- 2023-ம் ஆண்டிற்கான இந்திய கடற்படை படகோட்டுதல் போட்டியானது நடைபெற உள்ளது.
காந்திநகர் – குஜராத்
- முதல் ஆஸ்திரேலியா இந்திய கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
ஒப்புதல் வழங்கல்
- காலாட்படை, கடற்படை வீரர்களாகவும், கடற்படை மாலுமிகளாகவும் பணிபுரியும் பெண் வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கு இணையான மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்புச் சலுகைகள் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்பதல் அளித்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் தேனீக்கள்
- மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு படை (BSF) சார்பில் பாதுகாப்பிற்காக தேனீக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
ஏவுகணை சோதனை
- அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான புலாவா ஏவுகணையை (Bulava Missile) ரஷ்யா ஏவி சோதனை செய்துள்ளது.
- இந்த ஏவுகணையானது அணுசக்தி நீர்மூழ்கி போர் கப்பலான அலெக்சாண்டர்-3 நீர்மூழ்கி கப்பலில் இருந்து சோதனை செய்யப்பட்டது.
FIDE கிராண்ட் ஸ்வீஸ் தொடர்-பிரிட்டன்
- மகளிர் செஸ் பிரிவில் வைஷாலி (தமிழ்நாடு) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- இவ்வெற்றியின் மூலம் மகளிருக்கான செஸ் கேன்டிடேட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்
சாதனை சமன்
- நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி (277) 49வது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கர் (452) சாதனை சமன் செய்துள்ளார்.
- தென்னாப்பிக்காவிற்கு எதிரான போட்டியில் இச்சாதனையை புரிந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு
- சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- மேற்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்துள்ளார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டி – பிரான்ஸ்
- ஒற்றையர் பிரிவல் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு
- 7வது முறையாக பாரீஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று 6-வது சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்கராஸின் (ஸ்பெயின்) சாதனையை சமன் செய்துள்ளார்.
- 40-வது மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளார்.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி – ஜார்க்கண்ட்
- மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- இப்பட்டமானது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியாவின் 2வது பட்டமாகும்.
- இந்தியாவுடன் இறுதி போட்டியில் விளையாடிய ஜப்பான் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது.
International Day for Preventing the Exploitation of the Environment – Nov-6
November 3 Current Affairs | November 4 Current Affairs