Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th September 2023

Daily Current Affairs

Here we have updated 6th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கலைஞர் செம்மொழித் தமிழ் விருது

Vetri Study Center Current Affairs - Kalaignar semmozhi Tamil Viruthu

  • கலைஞர் செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதானது க.ராமசாமிக்கு (செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலர்) வழங்கப்பட்டுள்ளது.
  • கலைஞர் செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையானது 2008-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

  • ரவி கண்ணனுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.
  • டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், எஸ். மாலதி, எஸ்.பிருந்தா, எஸ். சித்திரகுமார் ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம்

  • ஆதிதிராவிட குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை  உறுதி செய்து, சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.
  • 2023-24 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு நடப்பாண்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேனீ பூங்கா

Vetri Study Center Current Affairs - Bee Park

  • திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதியை ஒட்டிய அத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாட்டின் முதல் தேனீ பூங்காவானது 14.8ஹெக்டர் பகுதியில் அமைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மே 20-ல் உலக தேனீ தினமானது (World Bee Day) கொண்டாடப்படுகிறது
  • தேனீக்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த முதல் நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

சிலை திறப்பு

Vetri Study Center Current Affairs - Subbarayan Statue

  • சென்னை காந்தி மண்டப வளாகத்தில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயனின் உருவச்சிலையானது தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

  • புதுதில்லி ராஜ்காட்டில் காந்தி தர்ஷன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைத்தார்.

பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா

Vetri Study Center Current Affairs - Prakash Srivastava

  • தேசிய பசுமை தீப்பாயத்தின் தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • தேசிய பசுமை தீப்பாயம் 2010-ல் புதுதில்லியில் நிறுவப்பட்டது.

லூபக்ஸ் (LUPEX) ஆய்வுத்திட்டம்

Vetri Study Center Current Affairs - LUPEX

  • நிலவின் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்ட ஆய்வுத் திட்டமாகும்.

டிஜிட்டல் பாஸ்போர்ட்

Vetri Study Center Current Affairs - Digital Passport

  • உலகில் முதல் முறையாக பின்லாந்து நாட்டில்  டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மியான்மர்

Vetri Study Center Current Affairs - ASEAN

  • ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மருக்கு 2026 ஆண்டு வரை ஆசியான் அமைப்பின் தலைமையேற்க தடை விதிக்கப்பட்டது.

ரஷ்யா

Vetri Study Center Current Affairs - Russia

  • உக்ரைன் நாட்டுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது என ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
  • ரஷ்யாவின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதிக்கு மேற்கத்திய நாடுகள் அனுமதி அளிக்கும் வரை இத்தடை அமலில் இருக்கும்.

கேபான்

Vetri Study Center Current Affairs - Gen Brice Oligui Nguema

  • பிரைஸ் க்ளாய்டர் ஒலிகு குவேமா கேபான் நாட்டின் அதிபராக பதவி ஏற்றுள்ளார்

வரலாற்றுச்சாதனை

Vetri Study Center Current Affairs - Cristiano Ronaldo

  • கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 850 கோல்கள் அடித்துள்ளார்.
  • கால்பந்து வரலாற்றில் 850 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற உலகச்சாதனையை படைத்துள்ளார்

குயின்டன் டி காக்

Vetri Study Center Current Affairs - Quinton de Kock

  • ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஒய்வு பெற உள்ளதாக குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) ஓய்வு பெற உள்ளார்.

September 04 Current Affairs | September 05 Current Affairs

Leave a Comment