Daily Current Affairs
Here we have updated 7-8th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
- சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின், பியூஷ் கோயல் பங்கேற்றுள்ளனர்.
- இதன் கருப்பொருள்: தலைமைத்துவம், நீடித்த நிலைத்த தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.
- 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு குறைகடத்திகள் மற்றும் மேம்பட்ட மின்னணுக்கொள்கை 2024-ஐயும் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ள நிறுவனங்கள்
நிறுவனங்கள் | முதலீடு |
1. வின்பாஸ்ட் (Vinfast) | ரூ.16,000 கோடி |
2. டாடா எலக்ட்ரானிக்ஸ் (TATA Electronics) | ரூ.12,082 கோடி |
3. ஜேஎஸ்டபுள்யூ (JSW) | ரூ.12,000 கோடி |
4. டிவிஎஸ் (TVS) | ரூ.5,000 கோடி |
5. பர்ஸ்ட் சோலார் (First Solar) | ரூ.2,500 கோடி |
6. ஹூண்டாய் (Hyundai) | ரூ.6,180 கோடி |
7. பெகட்ரான் (Pegatron) | ரூ.1,000 கோடி |
8. கோத்ரேஜ் (Godrej) | ரூ.515 கோடி |
9. மிட்சுபிஷி (Mitsubishi) | ரூ.200 கோடி |
10. குவால்காம் (Qualcomm) | ரூ.177 கோடி |
11. ஜியோ (JIO) | ரூ.35,000 கோடி |
பெண்களுக்கான சிறந்த நகரங்கள்
- 10 லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
- கோவை 9வது இடமும், மதுரை 11வது இடமும் பிடித்துள்ளன.
- 10 லட்சத்திற்கும் கீழான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது.
வேலூர் 2வது இடமும், சேலம் 6வது இடமும் பிடித்துள்ளன. - இப்படியலை தனியார் நிறுவனமான அவதார் குழுமம் வெளியிட்டுள்ளது.
புக்யா சினேகா பிரியா
- காவல்துறையின் தீவிரவாத தடுப்பு படையின் எஸ்.பி.யாக ஐபிஎஸ் அதிகாரி புக்யா சினேகா பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
- இப்பிரிவானது தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கோல்டன் குளோப் விருது
- கிறிஸ்டோபர் நோலன் OPPENHEIMER திரைப்படத்திற்காக கோல்டன் குளோப் விருதினை வென்றுள்ளார்.
- இவ்விருதானது சிறந்த இயக்குநர் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.
- இப்படத்தின் கதாநாயகன சில்லியன் மர்ஃபிக்கு சிறந்த நடிகர் விருது, ராபர்ட் டவுனி ஜூனியருக்கு சிறந்த துணை நடிகர் விருதும் கிடைத்துள்ளது.
உயர்கல்வி மாணவர் சேர்க்கை
- 2030-ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை 50% உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசம்
- மத்தியபிரதேசம் நர்மதை ஆற்றில் ஓப்காரேஷ்ர் பகுதியில் தண்ணீர் மீது சூரிய ஒளி உற்பத்தி மின்சாரம் செய்யும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
- இது உலகிலேயே அதிக அளவில் (600) மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் நிலையமாகும்.
- முதற்கட்டமாக 278 மெகாவாட் திறனுடைய மின்தகடுகள் செயல்பாட்டிற்காக வர உள்ளன.
- இரண்டாவதுகட்டமாக 322 மெகாவாட் திறனுடைய மின்தகடுகள் செயல்பாட்டிற்காக வர இருக்கிறது.
மகராஷ்டிரா
- இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமானது மகராஷ்டிராவின் சிவ்ரி-நவசேவா இடைய உருவாக்கப்படுள்ளது.
- இதன் நீளம் 22 கி.மீ தொலைவு உடையது.
- இப்பாலத்திற்கு அடல் பிஹாரி வாஜ்பாய் சிவ்ரி – நவசேவா அடல் சேது என பெயரிடப்பட்டது.
சேக் ஹசினா
- வங்கதேசத்தின் 4வது முறையாக பிரதமாக தேர்வாகியுள்ளார்.
ரகுராம் ஐயர்
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரகுராம் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927-ல் உருவாக்கப்பட்டது.
பிரிஸ்பன் ஒப்பன் டென்னிஸ் போட்டி
- ஆடவர் பிரிவில் கிரிகோர் டிமிட்ரோவும் (பல்கேரியா), மகளிர் பிரிவில் எலனா ரைபைப்காகினாவும் (கஜகஸ்தான்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டி – நியூசிலாந்துVetri Study Center Current Affairs – Solar power station on water
- கோகோ கெளஃப் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
யுனெடெட் கோப்பை டென்னிஸ் போட்டி – சிட்னி
- ஜெர்மனி அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
January 5 Current Affairs | January 6 Current Affairs