Daily Current Affairs
Here we have updated 7th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மக்களைத் தேடி மருத்துவம்
- மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கி 4ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் 1.86 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
- மக்களைத் தேடி மருத்துவம் – 5.8.2021
காஷ்மீர்
- உலக கைவினைப் பொருட்கள் சபை காஷ்மீர் நகரத்திற்கு உலக கைவினைப் பொருட்கள் நகரம் சான்றிதழை வழங்கியுள்ளது.
கர்நாடகா
- மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கர்நாடக மாநிலம் பணிக்குழு ஒன்றை நியமித்துள்ளது.
அலுமினிய உற்பத்தி
- இந்தியா அலுமினிய உற்பத்தியில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
- இந்தியா இரும்புத்தாது உற்பத்தியில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
விருது
- பிஜீ நாட்டின் உயரிய விருதான கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி (Companion of the Order of Fiji Award) விருது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானா
- விவசாயிகளிடமிருந்து அனைத்துப் பயிர்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) வாங்கும் முதல் மாநிலமாக ஹரியானா திகழ்கிறது.
- MSP – Minimum Support Price
பேரிடர் மேலாண்மை காப்பீடு
- நாகாலாந்து மற்றும் எஸ்பிஐ பொது காப்பீடு நிறுவனமும் இணைந்து பேரிடர் மேலாண்மை காப்பீடு திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மயில்கள் சரணாலயம்
- கர்நாடகாவின் ஆதிசுஞ்சனகிரி (Adichunchanagiri), கேரளாவிலுள்ள சூலனுவார் (Choolannuar) ஆகிய இடங்களை மயில்கள் சரணாலயமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- மயில் தேசியபறவையாக அறிவிக்கப்பட்ட ஆண்டு – 1963
- மயில் அறிவியல் பெயர் – பாவோ கிறிஸ்டாடஸ் (Pavo Cristatus)
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் விராலி மலையில் (புதுக்கோட்டை) மயில்கள் சரணாலயம் உள்ளது.
- தமிழ் நாட்டில் வேடந்தாங்கல், கோடியக்கரை மற்றும் கூடன்குளம் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் காணப்படுகின்றன.
இந்தியாவிலுள்ள பறவைகள் சரணாலயம்
- குமரகம் பறவை சரணாலயம் – கேரளா
- பரத்பூர் பறவை சரணாலயம் – இராஜஸ்தான்
- மயானி பறவை சரணாலயம் – மஹாராஷ்டிரா
- உப்பளப்பாடு பறவை சரணாலயம் – ஆந்திரப்பிரதேசம்
- நல்சரோவர் பறவை சரணாலயம் – குஜராத்
- நவாப்கஞ்ச் பறவை சரணாலயம் – உத்திரபிரதேசம்
Astra Mark-1
- வானிலிருந்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா மார்க்-1 (Astra Mark-1) ஏவுகணையை DRDO தயாரிக்க உள்ளது.
- DRDO (Defence Research & Development Organisation) – 1958
E-சங்கியிக்கி தளம்
- புள்ளி விவரங்கள் மற்றும் நிரல் அமலாக்கத் துறை E-சங்கியிக்கி தளத்தை (E-Sankhyiki Portal) அறிமுகம் செய்துள்ளளது.
மனு பாக்கர்
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கொடியினை ஏந்த உள்ளார்.
வினேஷ் போகட்
- ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முக்கிய தினம்
தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) – ஆகஸ்ட் 7
- வங்கபிரிவினைக்கு எதிராக 7.8.1905-ல் சுதேசி இயக்கம் துவங்கப்பட்டதன் நினைவாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
- 2015 முதல் கொண்டாடப்படுகிறது.
தேசிய ஈட்டி எறிதல் தினம் (National Javelin Day) – ஆகஸ்ட் 7
- 07.08.2021-ல் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நாளின் நினைவாக கொண்டாப்படுகிறது.
ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்
- இந்தியாவின் தேசிய கீதமனா ஜன கண மன பாடலை எழுதியுள்ளார்.
- 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.
- ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது வீரத்திருமகன் (knighthood) பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்
- அமர் சோனார் பங்களா என்னும் வங்காளதேசத்தின் தேசிய கீதத்தை இயற்றியுள்ளார்.
- கீதாஞ்சலி என்னும் நூலிற்கு 1913-ல் நோபல் பரிசு பெற்றார்.
- 1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.