Daily Current Affairs
Here we have updated 7th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பாரதி விருது
- ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு மக்கள் பேரவை பாரதி விருது வழங்கப்பட உள்ளது
- இவர் பாரதியில் ஆய்வாளரும், வரலாற்றியல் வல்லுநருமான பேராசிரியரும் ஆவார்.
சக்திமிக்க பெண்கள் பட்டியல்
- போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திமிக்க பெண்கள் 2023 பட்டியிலில் 4 இந்தியப் பெண்கள் இடம் பிடித்துள்ளன.
- 32வது இடத்தினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிடித்துள்ளார்.
- 60வது இடத்தினை ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவன தலைவர் ரோஷினி நாடார் பிடித்துள்ளா்.
- 70வது இடத்தினை ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத் தலைவர் சோமமண்டல் பிடித்துள்ளார்.
- 76வது இடத்தினை பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா பிடித்துள்ளார்.
- முதலிடத்தில் உசுலா வாண்டர் லியன் (ஜெர்மெனி), இரண்டாம் இடத்தில் கிறிஸ்டின் லிகார்டியன் (பிரான்ஸ்), மூன்றாவது இடத்தில் கமலா ஹாரிஸ் உள்ளனர்.
மசோதா ஒப்புதல்
- ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு (திருத்த) மசோதா 2023 ஆகியவற்றிற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
சோலார் கட்டமைப்பு
- புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் தொடர்பான ஆய்வு நிறுவனமான மெர்கம் கேபிடல் உலகின் மிகப்பெரிய சோலார் தாயரிப்பு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- 41.3 ஜிகாவாட்ஸ் கட்டமைப்பைக் கொண்டு போட்டல் எனர்ஜிஸ் நிறுவனம் (பிரான்ஸ்) முதலிடம் பிடித்துள்ளது.
- 41.3 ஜிகாவாட்ஸ் கட்டமைப்பைக் கொண்டு அதானி கீரின் எனர்ஜி நிறுவனம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இட ஒதுக்கீடு
- உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் திட்டம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- பிரிவு 243டி – உள்ளாட்சி தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு
ஆசிய ரேஞ்சர் கூட்டம்
- அசாமின் கெளாகாத்தியில் முதல் ஆசிய ரேஞ்சர் கூட்டமானது நடைபெற்றுள்ளது.
துணை மானியக் கோரிக்கை
- நடப்பு நிதியாண்டில் ரூ.58,378 கோடி கூடுதல் செலவீனத்திற்கான துணை மானியக் கோரிக்கைகள் மக்களவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
- வாக்காளராகப் பதிவு செய்யும் நடைமுறை குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த தேசத்தின் படிவம் என்ற பிரச்சாரத்தினை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
- நவம்பர் 30முதல் டிசம்பர் 9 வரை இப் பிரச்சாரமானது நடைபெற உள்ளது.
- புதிய வாக்காளர்கள் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சுருக்கத் திருத்தம் (எஸ்எஸ்ஆர்) பிரச்சார திட்டதினை அறிமுகம் செய்திருந்தது.
அக்சத்தா கிருஷ்ணமூர்த்தி
- நாசாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் ரோவரை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையை அக்சத்தா கிருஷ்ணமூர்த்தி பெற்று உள்ளார்.
சோதனை அணுக்கரு இணைவு உலை
- உலகின் மிகப்பெரிய சோதனை அணுக்கரு இணைவு உலையானது ஜப்பானில் திறக்கப்பட்டுள்ளது.
- JT60SA எனப் பெயரிட்டப்பட்டுள்ளது.
சோதனை வெற்றி
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டத்தின் பூர்வாங்க சோதனையான விலங்குகளை விண்வெளிக்கு கொண்டு செல்லக்கூடிய ஆய்வு கலத்தை ஈரான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
- 2029-க்குள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
- இதன் முதற்கட்டமாக விலங்குகளை அனுப்பி சோதிக்க உள்ளது.
ஐசிசி தரவரிசை
- டி20 தரவரிசையில் பெளலர்கள் பிரிவில் ரவி பிஷ்னோய் (இந்தியா) முதலிடத்தினை பிடித்துள்ளார்.
- டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தினை பிடித்துள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் ஷுப்மன் கில் முதலிடத்தினை பிடித்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பெளலர்கள் பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தினை பிடித்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆல்-ரவுண்டர் பிரிவில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தினை பிடித்துள்ளார்.
முஷ்ஃபிகுர் ரஹிம்
- வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை கையால் தடுத்து தனது விக்கெட்டினை இழந்தார்.
- இவ்வாறு முறையற்ற வகையில் பந்தை தடுத்தற்காக ஆட்டமிழந்த முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
- உலக அளவில் இச்சாதனையில் 11-வது வீரராக உள்ளார்.
- இந்தியாவின் மொஹிந்தர் அமர்நாத் இருமுறை (1986, 1989) இம்முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
ஆயுதப்படை கொடி தினம் (Armed Forces Flag Day) – டிசம் 07
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் (International Civil Aviation Day) – டிசம் 07
December 5 Current Affairs | December 6 Current Affairs