Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th March 2024

Daily Current Affairs

Here we have updated 7th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உயர்கல்வி சேர்க்கை

  • புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இத்திட்டம் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டத்தின்படி 6 முதல் 12 வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமாகும்.

கவிக்கோ விருது 2022

Vetri Study Center Current Affairs - Nellai Jayantha

  • கவிக்கோ அறக்கட்டளை மற்றும் தமிழ் இயக்கம் சார்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு கவிக்கோ விருது 2022 விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதானது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவாக சிறந்த கவிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிவில் விமான போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பு

  • இந்தியாவில் முதன் முறையாக ஹைதரபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் சிவில் விமான போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • விமானத்துறை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

திரவ இயற்கை எரிவாயு நிறுவனம்

  • கெயில் நிறுவனம் சார்பில் இந்தியாவின் மிகச்சிறிய திரவ இயற்கை எரிவாயு நிறுவனம் மத்தியபிரதேசத்தின் விஜயப்பூர் நகரில் துவங்கப்பட்டுள்ளது.

இ-சான் உபஜ் நிதி – இணையம்

  • விளைபொருள்களை அடகு வைத்து விவசாயிகள் கடன் பெற இ-சான் உபஜ் நிதி இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் 7% வட்டி விகிதத்தில் விவசாயிகளால் எளிதில் கடன் பெறலாம்.

மெட்ரோ சேவை

  • மேற்கு வங்கத்தின் கல்கத்தா மற்றும் ஹவுரா நகருக்கு இடையே ஹுக்ளி நீருக்கடியில் மெட்ரோ சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இச்சேவை ஹுக்ளி ஆற்றின் இடையே 520மீ தொலைவில் 32மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த வழித்தடம் எஸ்பிளனேட் மற்றும் ஹெளரா மைதான இரயில் நிலையங்களை இணைக்கிறது.

உலகின் மிகச்சிறிய மருத்துவர்

Vetri Study Center Current Affairs - Ganesh Baraiya

  • டாக்டர் கணேஷ் பரையா என்பவர் தனது டாக்டர் படிப்பை முடித்து உலகின் மிகச்சிறிய மருத்துவராக உருவெடுத்துள்ளளார்.
  • இவர் 3 அடி உயரம் கொண்டவர்.

AI ஆசிரியை

Vetri Study Center Current Affairs - AI Teacher Iris

  • இந்தியாவின் முதல் AI ஆசிரியை கேரளாவில் நியமிகப்பட்டுள்ளது.
  • இதற்கு ஐரீஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

  • இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வீனும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவும் தங்களது 100வது டெஸ்டில் விளையாடுகின்றன.
  • 100வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 14வது இந்திய வீரர் – ரவிச்சந்திரன் அஸ்வீன்
  • 100வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 17வது இங்கிலாந்து வீரர் – ஜானி பேர்ஸ்டோ

உலகச்சாதனை

Vetri Study Center Current Affairs - Shabnim Ismail

  • மகளிர் ப்ரீமியர் லீக் கோட்டியில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் 132.1 கி.மீ. வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார்.

March 5 Current Affairs | March 6 Current Affairs

Related Links

Leave a Comment