Daily Current Affairs
Here we have updated 7th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சென்னை ஐஐடி
- தான்சானியா நாட்டின் சான்சிபாரில் சென்னை ஐஐடி தனது சர்வதேச வளாகத்தினை தொடங்கியுள்ளது.
- சர்வதேச வளாகம் ஒன்றைத் தொடங்கும் முதல் ஐஐடி என்ற பெருமையை சென்னை ஐஐடி பெற்றுள்ளது.
ஹீராலால் சமாரியா
- இந்திய தலைமை தகவல் ஆணையராக (CIC) ஹீராலால் சமாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
வான்வழி விதைப்பு பணி
- இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். தேசாய் ஹெலிக்காப்டர் மூலம் 50,000 விதைப்பந்துகள் விசாகப்பட்டினத்தில் விதைக்கப்பட்டுள்ளன.
- இந்திய கடற்படை : 26 ஜனவரி 1950
பாரத் கோதுமை மாவு
- பொதுமக்களுக்கு மலிவு விலையில் கோதுமை மாவு கிடைக்க (1கிலா – ரூ.27.50 மிகாமல்) பாரத் கோதுமை மாவு திட்டத்தினை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு உணவு, பொது விநியோகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- இக்கோதுமை மாவு விற்பனைக்காக 100 நடமாடும் விற்பனை வாகனங்களை மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்துள்ளார்.
சிறுத்தைப்புலி தனிப்படை
- கர்நாடாகவின் பெங்களூரு நகரத்தில் சிறுத்தை புலி தனிப்படை (Leopard Task Force) அமைக்கப்பட உள்ளது.
- சிறுத்தை புலிகள் அதிகமாக உள்ள மாநிலம் மத்தியபிரதேசம்.
இந்தியா-பூடான் ரயில் தடம்
- அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் அரசர் வாங்சுக் இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
- இச்சந்திப்பில் இந்தியா-பூடான் இடையேயான ரயில் வழித்தடம் தொடங்குவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்காக நீர்; நீருக்காக பெண்
- நீருக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பை அதிகரிக்க பெண்களுக்காக நீர்; நீருக்காக பெண் (Water for Women; Water for Women) என்ற இயக்கத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
Time Out – முறை
- இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட் ஆகியுள்ளார்.
- இம் முறையில் அவுட் ஆன முதல் சர்வதேச கிரிக்கெட் வீரராகியுள்ளார்.
- டைம் அவுட் : கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் ஆட்டமிழந்த பின் அடுத்த வீரர் அடுத்த 3 நிமிடங்களுக்கு அவரது முதல் பந்தினை சந்திருக்க வேண்டும். இல்லையெனில் டை அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுப்பார்.
சையத் முஷ்டாக்
- சையத் முஷ்டாக் அலி கோப்பையை பஞ்சாப் அணி முதன் முறையாக வென்றுள்ளது.
மேக்ஸ் வெர்ஸ்டாபென்
- ஃபார்முலா 1 ரேஸின், பிரேலியன் கிராண்ட் ப்ரீ பிரிவில் ரெட் புல் அணி டிரைவரான மேக்ஸ் வெர்ஸ்டாபென் (நெதர்லாந்து) வெற்றி பெற்றுள்ளார்.
- நடப்பு சீசின் இவர் பெறும் 20வது வெற்றியாகும்.
குழந்தை பாதுகாப்பு தினம் (Infant Protection Day) – Nov-7
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (National Cancer Awareness Day) – Nov-7
November 4 Current Affairs | November 5 Current Affairs