Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 07th October 2023

Daily Current Affairs

Here we have updated 07th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ககன்யான் திட்ட மாதிரி (Gaganyaan Project Model)

Vetri Study Center Current Affairs - Gaganyaan project model

  • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான தொழில்நுட்ப உபகரண கட்டமைப்பினை சென்னையின் கேசிபி நிறுவனம் தயாரித்து இஸ்ரோவிடம் வழங்கியுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் 

Vetri Study Center Current Affairs - Perinatal mortality

  • பேறுகால இறப்புகளை தடுக்க பேறுகால இறப்பு தடுப்பு சிகிச்சை தொடர்பாக தமிழக பொது சுகாதரத்துறை சிங்கப்பூருடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • மகப்பேறு அவசர சிகிச்சைகள், பேறுகால இறப்புகளை தடுக்கும் பயிற்சிகள் மேற்கொள்ளும் விதமாக இப்புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது.

மார்பக புற்றுநோய் அறிக்கை

  • கடந்த 10 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
  • 2021-22 தரவுகளின் படி நாடு முழுவதும் 13,92,179 பேருக்கும், தமிழகத்தில் 81,814 பேருக்கு  புற்றுநோய் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆண்களை விட பெண்களே அதிக அளவில் புற்றுநோய்க்கு ஆளாகின்றன.
  • பெண்களில் லட்சத்தில் 52 பேருக்கு மார்பகப் புற்று நோயும், 18பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோயும், 6பேருக்கு கருப்பை புற்றுநோய்க்கும் ஆளாகின்றன.

ஒரிசா பாலு

Vetri Study Center Current Affairs - Orissa Balu

  • திருச்சியின் உறையூரைச் பூர்வீகமாக கொண்ட கடலியல் – தமிழ்வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு காலமானார்.
  • இவரது இயற்பெயர் சிவ பாலசுப்பிரமணி. கடலில் மணலில் ஆமைகள் முட்டையிட வருவதன் வழித்தடத்தை பின்பற்றி, தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதும் பயணித்து தொடர்பான ஆய்வகளையும் மேற்கொண்டார்.
  • கடல் சார் தொன்மை, அதன் வழியே தமிழர் மரபுகள் குறித்து ஒரிசா பாலு மேற்கொண்டவர். அழிந்து போனதாகக் கருதப்படும் குமரிக்கண்டம், லெமூரிய கண்டம் பற்றிய தொடர்பு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.

ஆர்பிஐ

Vetri Study Center Current Affairs - RBI

  • வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டிவிகிதமான ரெப்போ ரேட்டில் மாற்றமில்லை (6.50%) என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
  • 2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5%மாகவும், பணவீக்கம் 5.4% தொடர உள்ளது.
  • ரெப்போ ரேட் என்பது ஆர்பிஐ-யிடம் இருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டி ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

  • RBI ஆளுநர் – சக்திகாந்த்
  • RBI – Reserve Bank of India
  • RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 1935
  • RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
  • தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது

புதுமைப்பித்தமன் நினைவு விருது – 2022

  • அமெரிக்காவின் விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் புதுமைப்பித்தமன் நினைவு விருதானது ஆய்வறிஞர் பொ.வேல்சாமி, எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு

Vetri Study Center Current Affairs - Muhammad Moose

  • சீன ஆதரவாளரான முகமுது மூயிஸ் மாலத்தீவின் அதிபராக 2023-நவம்பரில் பதவியேற்க உள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு

Vetri Study Center Current Affairs - Nargis Mohammed

  • மனித உரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதுவுக்கு (Nargis Mohammed) நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் போராடி  13 சிறையில் அடைக்கப்பட்டு 5 முறைகள் குற்றம் உறுதி செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 134 கசையடிகள் பெற்றுள்ளார்.
  • உலகளவில் அமைதிக்கான நோபல்பரிசு பெறும் 19வது பெண்ணாகவும், ஈரான் நாட்டைச் சேர்ந்த 2வது பெண்ணாகவும் திகழ்கிறார்.
  • 2003-ல் ஈரானைச் சேர்ந்த ஷினி எபாடி அமைதிக்கான நோபல் பரிசினை வென்றிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

  • நடப்பாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஜான் ஃபோஸேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
  • நுண் குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பிற்காக  லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ், மெளங்கி பாவெண்டி ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
  • அணுக்களின் எலக்ட்ரான்களிள் இயக்கத்தை பற்றி ஆராய்ச்சியில் புதிய வழிமுறையை கண்டுபிடித்தற்காக பியர் அகஸ்டினி, ஆன்லூலியேர், ஃபெரென்ஸ் க்ரெளஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
  • கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க எம்ஆர்என்ஏ (MRNA) தடுப்பூசியை உருவாக்க உதவியதற்காக கேத்தின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

ஆசிய விளையாட்டு

Vetri Study Center Current Affairs - Hockey Team

  • இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது 4வது முறையாக தங்கம் வென்றுள்ளது. மேலும் 2024-ம் ஆண்டுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியாகியுள்ளது. ஜப்பான் 2வது இடம் பிடித்துள்ளது.
  • வில்வித்தை ஆடவர் ரெக்கர்வ் அணிகள் பிரிவில் அதானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா, பிரபாகர் துஷார் ஆகியார் தங்கம் வென்றுள்ளனர்.
  • பிரிட்ஜ் ஆடவர் அணிகள் பிரிவில் சந்தீப் நக்ரல், ஜக்கி, ராஜூ டோலானி, அஜ் பிரபாகர் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர்.
  • மகளிர் செபக்டக்ரா ரெகு அணிகள் பிரிவில் மெய்பக் தேவி, ஷாபோ தேவி, குஷ்பு, பிரியா தேவி, லெய்ரன்டோம்பி முதன் முறையாக வெண்கலம் வென்றுள்ளனர்
  • பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹெச்எஸ் பிரனாய் முதன் முறையாக வெண்கலம் வென்றுள்ளார்.
  • மல்யுத்தம் மகளிர் 62கிலோ பிரிவில் சோனம் மாலிக் வெண்கலம் வென்றுள்ளார்.
  • மல்யுத்தம் மகளிர் 76கிலோ பிரிவில் கிரண் பிஷ்ணோய் வெண்கலம் வென்றுள்ளார்.
  • மல்யுத்தம் ஆடவர் 57கிலோ பிரிவில் அமன் செஹ்ராவத் வெண்கலம் வென்றுள்ளார்

உலக பருத்தி தினம் (World Cotton Day)Oct 07

Vetri Study Center Current Affairs - World Cotton Day

  • கருப்பொருள்: “Making Cotton fair and sustainable for all; from farm to fashion”

October 05 Current Affairs | October 06 Current Affairs

Leave a Comment