Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 8th December 2023

Daily Current Affairs

Here we have updated 8th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

துணைவேந்தர் நியமனம்

Vetri Study Center Current Affairs - Felix - Vice-Chancellor of Fisheries University

  • நாகைப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக முனைவர் நா. பெலிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தராக நியமித்துள்ளார்.

நிவாரண நிதி

Vetri Study Center Current Affairs - State Disaster Fund

  • மிக்ஜம் புயலால் பாதிக்கப்ட்ட தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிதியாக 450 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் சென்னையில் முதற்கட்ட நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இத்திட்டத்திற்கு ரூ.561.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு

  • உத்தரகாண்டில் ஒரே நாளில் நைனிடால் மெழுகுவர்த்திகள், ராம்நகரின் லிச்சி, புரான்ஷ் சாறு மற்றும் அல்மோராவின் தினைகள் உள்பட 18 பொருட்களுக்கு புவிசார் குறியீடானது வழங்கப்பட்டுள்ளது.

லால்துஹோமா

Vetri Study Center Current Affairs - Lalduhoma

  • மிசோரோமின் முதல்வராக லால்டு ஹோமா பதவி ஏற்க உள்ளார்.
  • இவர் ஜோராம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் ஆவார்.
  • ஜோராம் மக்கள் இயக்கமானது மிசோரோமிலுள்ள 40 தொகுதிகளில் 27 தொகுதிகளை வென்றுள்ளது.
  • ஜோராம் மக்கள் இயக்கத்தின் தேர்தல் சின்னம் தொப்பி

மத்திய அரசு தடை விதிப்பு

Vetri Study Center Current Affairs - Ethanol – sugarcane juice, pulp is prohibited

  • எத்தனால் தயாரிப்புக்கு கரும்புச் சாற்றையோ, கூழையோ பயன்டுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தடையை பிறப்பித்துள்ளது.

Build for Bharat

Vetri Study Center Current Affairs - Build for Bharat

  • டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் (ONDC), Google Cloud India, Antler in India. Paytm, Protean, Startup India ஆகியவற்றுடன் இணைந்து  Build for Bharat என்ற முயற்சியை தொடங்கியுள்ளது.
  • டிஜிட்டல் வர்த்தகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனை

Vetri Study Center Current Affairs - Agni-1

  • குறுகிய தொலைவுகளை உள்ள இலக்குகளை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-1 இந்திய இராணுவத்தால் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணையானது ஒடிசாவின் அப்துல்கலாம் தீவிலிருந்து சோதிக்கப்பட்டுள்ளது

WISE விருது 2023

Vetri Study Center Current Affairs - Safeena Husain

  • கத்தார் அறக்கட்டளையின் WISE விருது 2023-ஆனது சஃபீனா ஹுசனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பள்ளிக்கு செல்லாத 14 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

Vetri Study Center Current Affairs - International Sugar Organization 

  • 2024-ஆம் ஆண்டிற்கான சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ISO) தலைமை இந்தியா ஏற்க உள்ளது.
  • ISO – International Sugar Organization
  • தலைமையகம் – இலண்டன்

தொடர்புடைய செய்திகள்

  • சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
  • சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தை  பிடித்துள்ளது.
  • உலகின் சர்க்கரை கிண்ணமாக கியூபா கருதப்படுகிறது.
  • இந்தியாவின் சர்க்கரை கிண்ணமாக உத்திரப்பிரதேசம் கருதப்படுகிறது.

கம்பா நடனம்

Vetri Study Center Current Affairs - Kamba Dance - Gujarat

  • மனித குலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரிய (ICH) பிரதிநிதி பட்டியிலில்  குஜராத்தின் கம்பா நடனத்தினை சேர்க்க யுனெஸ்கோ ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவிலிருந்து 15 கூறுகள் யுனெஸ்கோவின் ICH-ன் பிரதிநிதி பட்டியலில் பதியப்பட்டுள்ளன.
  • கம்பா நடனமாது குஜராத்தில் நவராத்திரி பண்டிகையில் நடத்தப்படும் பக்தி நடனமாகும்.
  • யுனெஸ்கோ (UNESCO) – 16.11.1945

BBC – 2023 முன்னணி 100 பெண்கள் பட்டியல்

Vetri Study Center Current Affairs -BBC - Top 100 Women List

  • BBC வெளியிட்டுள்ள 2023-ஆம் ஆண்டுக்கான முன்னணி 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 3 பெண்கள் இடம் பெற்றுள்ளன.
    1. தியா மிர்சா (நடிகை) – ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு நல்லெண்ண தூதர்
    2. ஹர்மன்ப்ரீத் கெளர் (கிரிக்கெட் வீரர்) – விஸ்டன் சிறந்த 5 வீரர் பட்டியல்
    3. ஆரத்தி குமார் ராவ் (புகைப்பட கலைஞர்) – தெற்காசிய பருவ நிலை மாற்றம்

டைம் இதழ் – சிறந்த நபர்

Vetri Study Center Current Affairs - Taylor Swift

  • டெய்லர் ஸ்விஃப்ட்-ஐ 2023-ஆம் ஆண்டின் சிறந்த நபராக  டைம் இதழ் அறிவித்துள்ளது.
  • இவர் அமெரிக்காவினை சேர்ந்த பாடகர் ஆவார்

ஜெமினி

Vetri Study Center Current Affairs - Google Gemini

  • கூகுள் நிறுவனமானது புதிதாக சூப்பர் ஸ்மார்ட் AI மாடலை அறிமுகம் செய்துள்ளது.
  • இதற்கு ஜெமினி (Gemini) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • கூகுளின் Deep Mind பிரிவால் உருவாக்கபட்ட பெரிய மொழி மாதிரி ஆகும்
  • Open Ai-ன் GPT-யுடன் போட்டியிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இலச்சினை வெளியீடு

Vetri Study Center Current Affairs - Logo of T20 World Cup

  • 2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இலச்சினையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
  • ஆண்கள் உலககோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட உள்ளது.
  • பெண்கள் உலககோப்பை  கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்பட உள்ளது.

 

December 6 Current Affairs | December 7 Current Affairs

Related Links

Leave a Comment