Daily Current Affairs
Here we have updated 8th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முதலீடுகள் ஈர்ப்பு
ஸ்பெயினுக்கு அரசு முறை பயணத்தின் போது ரூ.3,440 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் தூத்துக்குடி போன்ற நகரங்களில் சரக்கு முனையங்களை அமைக்க ஹபக் லாய்டு சர்வதேச நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.
- பொறியியல் கல்விதுறை சார்ந்த கல்வி உபகரணங்களை தயாரிக்கும் எடிபான் சர்வதேச நிறுவனம் ரூ.540 கோடி முதலீடு செய்ய உள்ளது.
- கண்ணாடி பொருள்களை தயாரிக்கும் ரோக்கா சர்வதேச நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்ய உள்ளது.
வருடாந்திர தொழில் ஆய்வறிக்கை
- 2020-21, 2021-22-க்கான வருடாந்திர தொழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- உற்பத்தி துறையில் அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
- குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
சி-பாட் ரோபோ (C-Bot)
- கடலின் அடியில் உள்ள பவளப்பாறையை கண்காணிக்க சி-பாட் என்னும் ரோபோவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- மேலும் நீர்வெப்பத் துவாராங்களையும் கண்டறியவும், கடல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த ரோபோ உதவுகிறது.
- கோவாவின் தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம் இந்த ரோபோவினை தயாரித்துள்ளது.
பிச்சைக்காரர்கள் இல்லா நகரம்
- 2026ஆம் ஆண்டுக்குள் 30 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லா நகரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் மதுரை நகரை பிச்சைக்காரர்கள் இல்லா நகரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வெடிமருந்து
- மெட்ராஸ் ஐஐடியானது இந்தியாவின் முதல் 155 மிமீ வெடிமருந்தினை உருவாக்கியுள்ளது.
- மெட்ராஸ் ஐஐடி – 1959
சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி
- ஹரியனாவில் சூரஜ்குண்ட் மேளா எனும் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சியானது நடைபெற்றுள்ளது.
- இதனை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைத்தார்.
- இக்கண்காட்சியின் பங்குதாரர் நாடாக தான்சானியாவும், பங்குதாரர் மாநிலமாக குஜராத்தும் உள்ளன.
முதலமைச்சர் வயோஸ்ரீ திட்டம்
- மகாராஷ்டிராவில் வயதானோர்கள், மாற்றுத்திறளானிகளுக்கு மாதம்தோறும் ரூ.3,000 வழங்க முதலமைச்சர் வயோஸ்ரீ திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.
கில்காரி திட்டம் (Kilkari Programme)
- தேசிய சுகாதாரத்துறையானது கில்காரி திட்டத்தினை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கியுள்ளது.
- கர்ப்பம், பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு பற்றிய ஆடியோ செய்திகளை குடும்பங்களின் மொபைல் போன்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டமாகும்.
இலவச விசா
- ஈரான் நாடானது இந்தியர்களுக்கு இலவச விசா சேவை வழங்கியுள்ளது.
- இதன் மூலம் ஈரான் நாட்டிற்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம்.
நல்லெண்ண தூதர்
- அனைவருக்கும் கல்விக்கான நல்லெண்ண தூதராக வினிசியஸ் ஜூனியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- யுனெஸ்கோ (UNESCO) இவரை நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது.
- UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) – ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் – 16.10.1945
டெஸ்ட் பெளலிங் தரவரிசை
- ஐசிசி வெளியிட்டுள்ள டெஸட் பெளலிங் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
- டெஸ்ட் பெளலிங் தரவரிசையில் இந்திய வீரர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
- ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடம் பிடித்திருந்தார்.
- இதன் மூலம் அனைத்துவித கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடம் பிடித்துள்ள ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
February 6 Current Affairs | February 7 Current Affairs