Daily Current Affairs
Here we have updated 8th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ் அகராதியல் தினம்
- தமிழ் அகராதியியலின் தந்தையான வீராமாமுனிவரின் பிறந்த நாளானது தமிழ் அகராதியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- தேம்பாவணி என்னும் நூலினை இயற்றியுள்ளார்
- இவர் திருக்குறள், தேவாரம், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பிற மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார்
தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம்
- தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் (Tamil Nadu International Symposium on Sports Science) சென்னையில் நடைபெற்றது.
- இதனை தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
புதிய பல்லி இனம்
- சினிமாஸ்பில் ரஷிடி என்ற புதிய பல்லி இனம் விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டால்பின் திட்டம்
- ரூ.8.13 கோடி செலவில் தமிழக கடல்பகுதிகளில் உள்ள டால்பின்களை பாதுகாக்க டால்பின் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது.
- தமிழகத்தில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் உள்ளன. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் அதிகமாக டால்பின்கள் வாழ்கின்றன.
- 2021-ல் டால்பின் திட்டம் தொடங்கப்பட்டது.
- டால்பின்கள் தினம் – அக்டோபர் 05
ஜி.திலகவதி (G. Thilakavathy)
- சென்னை ஐஐடி மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண முறைமன்ற நடுவராக ஜி.திலகவதி (ஐபிஎஸ் அதிகாரி – ஓய்வு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொலீஜியம் பரிந்துரை
- உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 3 பேரினை கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
- தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதிஷ் சந்திர சர்மா
- ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ்மசி
- குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா
- இதன் மூலம் உச்சநீதிமன்ற எண்ணிக்கை 34-ஆக உயர வாய்ப்புள்ளது.
மகப்பேறு நிதியுதிவி திட்டம்
- தமிழகத்தில் மகப்பேறு நிதியுதிவி திட்டத்தின் கீழ் 3 தவணைகளில் ரூ.14 ஆயிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்படுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- மகப்பேறு நிதியுதிவி திட்டம் – 2006
ஜிகா தீநுண்மி
- கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா தீநுண்மி பாதிப்பான கேரளாவின் வடக்கு கண்ணூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
- இப்பாதிப்பு பெரும்பாலும் ஏடியெஸ் கொசுக்கள் மூலமாக பரவுகிறது.
மருந்து தடை
- கால்நடை மருத்துவ சிகிச்சையில் வலிநிவாரணி, அலர்ஜிக்காக பயன்படுத்தப்படும் கீட்டோபிரோபின், அசிக்லோபெனாக் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
- ஏற்கனேவே டிக்ளோபெனாக் மருந்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தடை காரணம்: இம்மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சையளித்த கால்நடைகள் இறக்கும் தருவாயில் அதனை உண்ணும் கழுகளும் இறக்கின்றன.
பட்டினி திட்டம்
- உத்தரகாண்டில் இந்தியாவின் பட்டினி திட்டத்தினை (Hunger Project) நார்வே ஆதரித்துள்ளது.
பயிர் கழிவுகள் எரிப்பிற்கு தடை
- தில்லியில்-என்.சி.ஆர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
ஆகாய நடைபாதை
- ஜம்மு-காஷ்மீரிலுள்ள வைஷ்ணவ் தேவி கோவிலில் 250மீ நவ்துர்கா ஆகாய நடைபாதையை ஜனாதிபதி திரெளபதி முர்மு திறந்து வைத்தார்.
பசுக் கணக்கெடுப்பு
- உத்திரபிரதேசம் மாநிலம் பசுக் கணெக்கெடுப்பை நடத்த உள்ளது.
உண்ணாவிரதப் பேராட்டம்
- 2023-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு நர்கஸ் முகமதி (Narges Mohammadi) ஈரானில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.
- ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் மற்றும் சுநத்திரத்தினை மேம்படுத்த போராடியதற்கான வழங்கப்பட்டுள்ளது.
FIDE கிராண்ட் ஸ்வீஸ் தொடர்-பிரிட்டன்
- செஸ் ஓபன் பிரிவில் குஜராத்தின் விதித் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- இவ்வெற்றியின் மூலம் கனடா செஸ் கேன்டிடேட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்
தொடர்புடைய செய்திகள்
- மகளிர் செஸ் பிரிவில் வைஷாலி (தமிழ்நாடு) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டி – மெக்ஸிக்கோ
- போலந்து நாட்டின் டென்னிஸ் வீராங்களையான இகா ஸ்வியாடெக் (Iga Swiatek) சாம்பியன் பட்டத்தை வென்றுளார்.
- இவ்வெற்றியின் மூலம் சர்வதேச தரவரிசை பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளார்.
- இரட்டையர் பிரிவில் லாரா சிக்மெண்ட (ஜெர்மெனி), வெரா ஸ்வோனாரெவா (ரஷ்யா) இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆசிய வில்வித்தை போட்டி 2025
- 2025-ஆம் ஆண்டுக்கான 24வது ஆசிய வில்வித்தை போட்டியை (Asian Archery Tournament) வங்கதேசம் நடத்த உள்ளது.
உலக கதிரியக்க தினம் (World Radiography Day) – Nov 08
November-6 Current Affairs | November-7 Current Affairs