Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 08th October 2023

Daily Current Affairs

Here we have updated 08th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நீலகிரி வரையாடு திட்டம் (Nilgiri Draft Project)

Vetri Study Center Current Affairs - Nilgiri Draft Project

  • அக்டோபர் 12-ல் நீலகிரி வரையாடு திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
  • தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பற்றிய ஆய்வினை 1975-ல் முன்னெடுத்த ஆய்வாளரான டாக்டர் ஈ.ஆர்.சி. டேவிதாரின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 7 நீலகிரி வரையாடு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • 28.12.2022-ல் தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டினை பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் “நீலகிரி வரையாடு திட்டம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    ரூ.25.14 கோடி செலவில் 2027-வரை இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பதவி உயர்வு – திட்டம்

Vetri Study Center Current Affairs - Indian Navy

  • இந்தியாவில் கடற்படை வீரர்கள் பதவி உயர் பெறுவதற்காக அவர்களது திறனை அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்ய 360 டிகிரி மதிப்பீடு முறையை இந்திய கடற்படை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு

Vetri Study Center Current Affairs - GST

  • சர்க்கரைப் பாகு கழிவு (மொலாசஸ்) மீதான சரக்கு மற்றும் சேவை (GST) வரி 5%மாக குறைக்கப்பட்டுள்ளது.
  • இவ்வரியானது 28%லிருந்து 5%மாக குறைக்கப்பட்டுள்ளது.
  • தில்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிகள் (GST) பங்கீட்டிற்கான தீர்வு முறையை ஆய்வு செய்ய அரவிந்த் சுப்ரமணியன் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • Goods and Service Tax (GST) என்பது 01.07.2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு வரி மற்றும் மறைமுக வரியாகும்.
  • இதன் வரி விகிதங்கள் : 0%, 5%, 12%, 18%, 28%

ஜாதி வாரி கணக்கெடுப்பு

Vetri Study Center Current Affairs - Caste wise census

  • ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
  • மேலும் பல்வேறு சமுகங்களுக்காக ராஜஸ்தானில் ராஜபலி நலவாரியம், மெக்வால் நலவாரியம், பூஜாரி நலவாரியம், கெவாட் நலவாரியம, ஜாதவ் நலவாரியம், தங்கா நலவாரியம், சித்ரகுப்தா கியாஸ்தா உள்ளிட்ட 8 நலவாரியங்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • பீகாரில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) 63% அங்கம் வகிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்

Vetri Study Center Current Affairs - Israel

  • பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் எனும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமானது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
  • இதற்கு ஆபரேஷன் அல் – அக்ஸாஸ்டார்ம் என பெயரிடப்பட்டுள்ளது.
  • இஸ்ரேல் அரசானது அயர்ன் ஸ்வாரட்ஸ் என்ற பெயரில் எதிர் தாங்ககுதலை நடத்துகிறது.
  • இஸ்ரேஸ்லுக்கும், ஹமாஸ் அமைப்பிற்கு 2005-ல் இருந்து இப்பிரச்சனையானது தொடர்கிறது.

ஆசிய விளையாட்டு

Vetri Study Center Current Affairs - asian games

  • ஹாங்ஷெள ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அணியாது 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலமென 107 பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய போட்டியின் வரலாற்றில் இந்திய அணி 100 பதக்ககங்களை முதன் முறையாக வென்றுள்ளது.
  • கபடி போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்றுள்ளன
  • ஆடவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
  • இந்திய மகளிர் அணி ஹாக்கி போட்டியில்  அணி தங்கம் வென்றுள்ளது.
  • பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் முதன் முறையாக தங்கம் வென்றுள்ளனர்.
  • வில்வித்தை ஆடவர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் ஓஜாஸ் பிரவீன் தங்கமும், அபிஷக் வர்மா வெள்ளியும் வென்றுள்ளனர்.
  • வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா தங்கமும், அதிதி சுவாமி வெண்கலமும் வென்றுள்ளனர். இருவரும் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்
  • செஸ்ஸில் பிரக்ஞானந்தா, டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது.
  • மகளிருக்கான செஸ்ஸில் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, வந்திகா அகர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது.
  • மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா வெள்ளி வென்றுள்ளார்.

இந்திய விமானப்படை தினம் (Indian Air Force Day)Oct 08

Vetri Study Center Current Affairs - Indian Air Force Day

  • கருப்பொருள்: “‘IAF – Airpower Beyond Boundaries”
  • இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட நாள்: 26 January 1950

October 06 Current Affairs | October 07 Current Affairs

Leave a Comment