Daily Current Affairs
Here we have updated 9-10th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தொழில் முனைவோராக்கும் தூய்மை பணியாளர்கள்
- தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.
- தூய்மைப் பணியாளர்கள் சொந்தமாக கழிவுநீர் அகற்றும் ஊர்தி வாங்குவதற்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
- அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் 50% மானியமும், இதர பிரிவினருக்கு 40% மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு விருது
- பெண் குழந்தைகளின் பாலின உயர்விற்கு சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.
- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளரான விஷ்ணு சந்திரன்-க்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளரான கலைச்செல்வி மோகன்-க்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது
- ஈராேடு மாவட்ட ஆட்சியாளரான இராஜகோபால் சுக்கரா-க்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது
கடல்சார் உயர் இலக்கு படை
- தமிழக அரசு சார்பில் இராமநாதபுரத்தில் இந்தியாவில் முதன் முறையாக கடல்சார் உயர் இலக்கு படை உருவாக்கப்பட்டது.
- மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியில் உள்ள கடல் வளங்கள் மற்றும் கடல் பல்லுயிர்களை பாதுகாக்க இப்படை உருவாக்கப்பட்டது.
கனவு இல்லம் திட்டம்
- எழுத்தாளர்களுக்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ம.ராஜேந்திரன், இந்திரா பார்த்த சாரதி ஆகியோருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
- கனவு இல்லம் திட்டம் – 03.06.2021
மாநிலங்களவை உறுப்பினர்
- இன்ஃபோசியஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் அரசிலமைப்பு விதி 80(3)ன் படி நியமிக்கப்பட்டுள்ளார்
- இவர் 2006-ல் பத்மஸ்ரீ விருதும், 2023 பத்மபூஷண் விருதும் பெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- கலை, இலக்கியம், அறிவியில் மற்றும் சமூக சேவையில் சிறந்து விளங்கியதற்காக மாநிலங்களையில் 12 பேரை உறுப்பினராக நியமிக்கிறார்.
- மாநிலங்களை உறுப்பினர் – 6 ஆண்டு பதவிக்காலம்
தேசிய கூட்டுறவு தரவு தளம்
- டிஜிட்டல் மயமாக்கலுக்கான நடவடிக்கைகாக தேசிய கூட்டுறவு தரவு தளம் உருவாக்கப்பட்டது.
தேசிய படைப்பாளிகள் விருது
- தேசிய படைப்பாளிகள் விருதானது 23 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- முதலாவது தேசிய படைப்பாளிகள் விருதானது ஜென்-லீ-க்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர் ராஜினமா
- தேர்தல் ஆணையர் அருண்கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- அருண்கோயல் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் கொடுத்துள்ளார்.
லோக் அதாலத்
- நிகழாண்டின் முதலாவது தேசிய லோக் அதாலத் அமர்வில் 1.13 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- லோக் அதாலத் (எ) மக்கள் நீதிமன்றம் பேச்சவார்த்தை மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நீநீதிமன்றம் ஆகும்.
- குஜராத், ஜூனகாரில் மார்ச் 14, 1982-ல் லோக் அதாலத் நடந்தது
சி-ஸ்பேஸ் ஓடிடி தளம்
- இந்தியாவின் முதல் முறையாக கேரள மாநிலமானது தனக்கான ஒடிடி தளத்தினை தொடங்கியுள்ளது.
- இதற்கு சி-ஸ்பேஸ் ஓடிடி (C-SPACE) தளம் பெயரிடப்பட்டுள்ளது.
விளையாட்டு பயிற்சி – இந்திய ராணுவப்படை
- சிறுமிகளுக்கு பளு தூக்குதல், குத்துச்சண்டை போன்ற பயிற்சிகள் வழங்க இரு இடங்களில் நிறுவனங்களை இந்திய ராணுவப் படை தொடங்க உள்ளது.
- மத்திய பிரதேசம் – ராணுவ துப்பாக்கிச் சுடும் அலகு
- மகாராஷ்டிரா – புனேவிலுள்ள ராணு விளையாட்டு நிறுவனம்
மானியம் நீட்டிப்பு
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு இணைப்பு திட்ட மானியம் 2024-25ஆம் நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- உஜ்வாலா திட்டம் – 2016
ஆசிஃப் அலி ஜர்தாரி
- பாகிஸ்தானின் 14வது அதிபராக ஆசிஃப் அலி ஜர்தாரி பொறுப்பேற்க உள்ளார்.
கிறிஸ்டினா பிஸ்கோவா
- செக்குடியரசினை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி
- உஸ்பெகிஸ்தானின் நோடின்பெக் அப்துசதோரவ் முதலிடம் பிடித்துள்ளார்.
- இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 2வது இடமும், டி.குகேஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
CISF Raising Day – March 10
- CISF – Central Industrial Security Force – 10.03.1969
- தலைமையிடம் : புதுதில்லி
சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் (International Day of Women Judges) – March 10
சர்வதேச செயற்கை முடி தினம் (WIG Day) – March 10
March 7 Current Affairs | March 8 Current Affairs