Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th August 2024

Daily Current Affairs

Here we have updated 9th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ்ப் புதல்வன் திட்டம்

Vetri Study Center Current Affairs - Tamil Pudhalvan Scheme

  • உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டமானது கோவையில் வைத்து தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

  • புதுமைப்பெண் திட்டம் – 5.9.2022

கல்வெட்டு

  • திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அருகே உள்ள தாளீகீஸ்வரா கோயில்களின் சுவர்களில் வட்டெழுத்து பதிக்கப்பட்ட ஒரு கல்வெட்டும், தமிழ் எழுத்து பதித்த ஒரு கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் இலக்கு போடியம்

  • ஒலிம்பிக் இலக்கு போடியம் திட்டத்தின் கீழ்  1050 வீரர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு சிறப்பு பயிற்சியை அளிக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கேலோ இந்தியா திட்டம்

  • இத்திட்டத்தின் கிழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது.
  • மேலும் 14வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கீர்த்தி திட்டம்

  • பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் திறமையை கண்டறிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

EOS-08 

  • ஆகஸ்ட் 15ல் EOS-08 என்னும் செயற்கைக்கோள் SSLV-D3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • EOS-08 – Earth Observation Satellite-08
  • SSLV – Small Satellite Launch Vehicle

புலிகள் காப்பகம்

  • சத்திஸ்கர் மாநிலத்தில் நான்காவது புலிகள் சரணாலயமாக குரு காசிதாஸ்-தாமோதர் பிங்லா புலிகள் காப்பகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்கள்

  • ஆனைமலை புலிகள் காப்பகம்
  • ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம்
  • முதுமலை புலிகள் காப்பகம்
  • களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா

  • வக்ஃப் வாரிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
  • இவ்வாரியத்திற்குள் மூஸ்லிம் அல்லாதோர் இடம் பெறும் படியும், வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் நிலம் பற்றியும் திருத்தம் மேற்கொள்ள உள்ளது.
  • வக்ஃப் வாரிய சட்டம் 1995-ல் உருவாக்கப்பட்டது.

விக்யான் குழு விருது

  • சந்திராயன்-3 திட்ட குழுவினர்களுக்கு விக்யான் குழு (Vigyan Team) விருது வழங்கப்பட்டுள்ளது.

பெய்லி பாலம்

  • கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மக்களை காப்பாற்ற சூரல் மலையில் பெய்லி பாலம் அமைக்கப்பட்டது.

புத்ததேவ் பட்டாச்சார்ஜி

Vetri Study Center Current Affairs - Buddhadev Bhattacharya

  • மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி அண்மையில் காலமானார்.

பரவத் பிரஹார்

  • லடாக் பகுதியில் பரவத் பிரஹார் என்னும் இந்திய ராணுவ பயிற்சி நடத்தப்பட்டது.

ஜெர்டன் கல்குருவி

  • ஆந்திரப்பிரதேசத்தின் கடப்பாவிலுள்ள ஸ்ரீலங்காமஸ்லேஸ்வர வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள ஜெர்டன் கல்குருவி (Jerdon’s Courser) பறவை அழியும் நிலையில் உள்ளது.

உத்திரப்பிரதேசம்

  • 7வது இந்திய சர்வதேச மருத்துவமனை கண்காட்சியானது உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்றது.

UPI வரம்பு

  • வருமான வரி செலுத்துவதற்கான UPI பரிவர்த்தனை வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • UPI – Unified Payments Interface

G20 நிதி அமைச்கர்கள் கூட்டம்

  • G20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நிதி அமைச்கர்கள் கூட்டம் பிரேசிலுள்ள ரியோஜெனிவாவில் நடைபெற்றது.

உதாரா சக்தி

  • மலேசியாவிலுள்ள குவாண்டன் என்னுமிடத்தில் மலேசியா மற்றும் இந்தியா இடையேயான கூட்டு விமானப்படைப் பயிற்சி நடைபெற்றது.

பாரீஸ் ஒலிம்பிக்

  • 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி பிரிவில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
  • முதலிடம் – நெதர்லாந்து, இரண்டாம் இடம் – ஜெர்மெனி

நீரஜ் சோப்ரா

Vetri Study Center Current Affairs - Arshad Nadeem

  • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97மீ) தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
  • இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

முக்கியதினம்

நாகசாகி தினம் (Nagaski Day) – ஆகஸ்ட் 9

சர்வதேச பழங்குடியினர் தினம் (World Indigenous Day) – ஆகஸ்ட் 9

Related Links

Leave a Comment