Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th February 2024

Daily Current Affairs

Here we have updated 9th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சுகித்தா

Vetri Study Center Current Affairs - Sukita

  • திருச்சி மாவட்டத்தின் சுகிதா தேசிய பெண் குழந்தைகள் தின மாநில விருது 2024-ஐ வென்றுள்ளார்.
  • தமிழ்நாட்டில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 24-ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய பெண் குழந்தைகள் தினம் – ஜனவரி 24
  • உலக பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11

ஈரநிலப் பறவைகள்

  • ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு-2024 ன்படி தமிழ்நாட்டில் 6,80,028 ஈர நிலப்பறவைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம்

  • 6.5%மாக உள்ள ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளளார்.
  • இந்தியாவின் பணவீக்கம் 4%லிருந்து 6%மாக உள்ளது.
  • பொருளாதார வளர்ச்சி 7%மாக இருக்கிறது.
  • மேலும் இணையம் இல்லாமல் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்துவதற்கு எண்ம ரூபாய் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

  • ரெப்போ விகிதம் –ஆர்பிஐ-யிடம் இருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டி
  • ரிவர்ஸ் ரெப்போ விகிதம் – ஆர்பிஐ மற்ற வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டி
  • RBI ஆளுநர் – சக்திகாந்த தாஸ்
  • RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 1935
  • RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
  • தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

கேரளா

  • கேரள அரசானது சுற்றுச்சூழலுக்காக தனி சுற்றுச்சூழல் பட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ளது.

தளவாட செயல்திறன் குறியீடு 2023

  • உலக வங்கி வெளியிட்டுள்ள தளவாட செயல்திறன் குறியீடு 2023-ல் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியா 38வது இடம் பிடித்துள்ளது.

பாரதிய அந்தரிக்ஷா மையம்

Vetri Study Center Current Affairs - Bharatiya Antariksha Station

  • இந்தியா தனக்கென தனி சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் (Bharatiya Antariksha Station) அமைக்க உள்ளது.
  • இந்த விண்வெளி மையம் 2035-ல் செயல்பாட்டிற்கு வரும்
  • சர்வதே விண்வெளி மையம் அமைக்கும் 3வது நாடு என்ற பெருமையை பெற உள்ளது.

ஹைட்ரஜன் ரயில்

  • சென்னை ஐசிஎஃப் ஹைட்ரஜன் ரயிலை தயாரிக்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி

  • திருநங்கையர்களுக்கு இலவச பேருந்து சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இஸ்ரோ அறிவிப்பு

  • பிப்ரவரி 17-ல் இன்சாட் 3 டிஎஸ் செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • பருவநிலை மாறுபாடுகளை ஆராயும் பேரிடர்களை முன் கூட்டியே அறிவதற்கு இச்செயற்கைகோள் உதவுகிறது.

சாரதி இணையதளம்

  • பயிர்க் காப்பீடு தொடர்பான குறைகளை தீர்க்கவும், காப்பீடு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்ள சாரதி என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த இணைய தளத்தினை ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்துள்ளார்.

க்ரிஷ் ரக்ஷக் இணையதளம்

  • பயிர்க் காப்பீடு திட்டத்தின் குறை தீர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்த க்ரிஷ் ரக்ஷக் என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
  • மேலும் இதற்காக 14447 என்ற இலவச உதவி எண்ணும் தொடங்கப்பட்டுள்ளது.

இல்ஹாம் அலியேவ்

Vetri Study Center Current Affairs - Ilham Aliyev

  • அஜர்பைஜான் அதிபர் தேர்தலில் இல்ஹாம் அலியேவ் வெற்றி பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா

  • ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 7வது இந்தியப் பெருங்கடல் மாநாடானது நடைபெற்றுள்ளது.

நிரஞ்சன் ஷா மைதானம்

Vetri Study Center Current Affairs - Niranjan Shah Cricket Stadium

  • குஜராத்தின் ராஜ்கோட்டிலுள்ள செளராஷ்டிரா மைதானத்திற்கு நிரஞ்சன் ஷா மைதானம் என பெயரிடப்பட்டுள்ளது.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்  (தமிழ்நாடு) – பிப்ரவரி 09

February 7 Current Affairs  | February 8 Current Affairs

Related Links

Leave a Comment