Daily Current Affairs
Here we have updated 9th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024
- தமிழகத்தில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கபட வாய்ப்புள்ளது.
- முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த செயலாக்கத்திற்கு டி.ஆர்.பி.ராஜா தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தோல் அல்லாமல் காலனிகள் உற்பத்தி செய்ய நிறுவப்பட்ட ஆலைகள்
நிறுவனம் | இடம் | மதிப்பீடு |
பெங்க்டே | விழுப்புரம் | ரூ.500 கோடி |
ஹைக்ளோரி | கள்ளக்குறிச்சி | ரூ.2302 கோடி |
ஹாங்க்பூ | பெரம்பலூர் | ரூ.48 கோடி |
எங்கள் பள்ளி – மிளிரும் பள்ளி
- எங்கள் பள்ளி – மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியைத் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆர்.காந்தி ஆகியோர் துவங்கி வைத்துள்ளனர்.
- எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் – 01.09.2023
வரையாடுகள் கணக்கெடுப்பு
- முதன் முறையாக ட்ரோன்கள் மூலம் வரையாடுகள் கணக்கெடுப்பானது மார்ச், ஏப்ரலில் நடைபெற உள்ளது.
- தமிழ்நாட்டின் மாநில விலங்காகும்.
- அக்டோபர் 12 – நீலகரி வரையாடுகள் திட்டம்
- அக்டோபர் 7 – நீலகிரி வரையாடு தினம்
மாலத்தீவு
- 2023-ல் மாலத்தீவிற்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளன.
- இரண்டாவது இடம் – சீனா
- மூன்றாவது இடம் – பிரிட்டன்
பிக்மி 3.0 மென்பொருள்
- கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் மருத்துவக் கண்காணிப்புக்கான பிக்மி 3.0 என்னும் மென்பொருள் சேவையை தமிழக விளையாட்டு மேம்பாடுத்துறை அமைச்சர் துவங்கி வைத்துள்ளார்.
உலக தமிழ் பொருளாதார மாநாடு
- 10வது உலக தமிழ் பொருளாதார மாநாடானது சென்னையில் நடைபெற்றுள்ளது.
சந்துபி திருவிழா
- அண்மையில் அசாமில் சந்துபி திருவிழாவானது கொண்டாடப்பட்டது.
கோல்டன் குளோப் விருது
- அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகை விருதானது கில்லர் ஆஃப் தி மூன் (Killer of the Moon) என்ற திரைப்படத்திற்காக லில்லி கிளாஸ்டன்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த பிறமொழி திரைப்பட விருதானது பிரெஞ்சு மொழி திரைப்படமான அனாடமி ஆஃப் ஏ ஃபால் (Anatomy of a Fall)-க்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜஸ்டின் டிரெய்ட் இயக்கியுள்ளார்.
சர்வதேச ஊதா திருவிழா
- மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச திருவிழாவனது கோவாவில் நடைபெறுகிறது.
நிலவிற்கு ஆய்வுக்கலம்
- அமெரிக்காவின் தனியார் விண்வெளித்துறை நிறுவனமான அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்ள பெரேக்ரின் லூனார் லேண்டர் என்னும் ஆய்வுக்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது.
- இந்த ஆய்வுக்கலமானது வல்கன் என்னும் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பட்டுள்ளது.
- 50 ஆண்டுகளுக்கு முன் 1972 நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்கா ஆய்வுக்கலனை அனுப்பியிருந்தது
அணிசேரா இயக்க உச்சி மாநாடு
- அணிசேரா இயக்க உச்சி மாநாடானது உகாண்டாவில் நடைபெறுகிறது.
ஆசிய தகுதி சுற்று போட்டி – இந்தோனேசியா
- 10மீ ஏர் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் வருண்தோமர் தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- 10மீ ஏர் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் அர்ஜுன் சீமா வெள்ளி வென்றுள்ளார்.
- 10மீ ஏர் பிஸ்டல் ஆடவர் அணிகள் பிரிவில் வருண்தோமர், அர்ஜுன் சீமா, உஜாவல் மாலிக் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
- 10மீ ஏர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் ஈஷா சிங் தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- 10மீ ஏர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் ரிதம் சங்வான் வெள்ளி வென்றுள்ளார்.
- 10மீ ஏர் பிஸ்டல் மகளிர் அணிகள் பிரிவில் ஈஷா சிங், ரிதம் சங்வான், சுரபிராவ் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
பிரிட்டீஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி – இங்கிலாந்து
- 17வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் வெள்ளி வென்றுள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
- டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான ஹென்ரிச் கிளாசன் அறிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Non – Resident Indian Day) – Jan 09
- காந்தியடிகள் 1995 ஜனவரி 09-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திருமப்பியதன் நினைவாக கெண்டாடப்படுகிறது.
January 6 Current Affairs | January 7-8 Current Affairs