Daily Current Affairs
Here we have updated 9th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புதிய திட்டம்
- குடும்பம், சமுதாயம், பணியிடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் சகி-ஒன் ஸ்டாப் மையம் என்ற திட்டத்தினை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் உதவி பெற 181 என்ற இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பெண்ளுக்குகான இலவச உதவி எண்கள் – 100, 1091
கடல் ஆமை
- கடல் ஆமைப் பாதுகாப்பிற்காக வனத்துறையால் Tamilnadu Turtle Guardians மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- காவல் உதவி செயலி – அவசரநிலைக்காக தொடங்கப்பட்ட செயலி
- TNSED School App – பள்ளி மாணவர்களின் வருகை பதிவிற்காக தொடங்கப்பட்டது.
இஸ்ரோ தலைவர்
- இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் இஸ்ரோவின் 11வது தலைவர் ஆவார்.
தொடர்புடைய செய்திகள்
- முதல் தலைவர் – விக்ரம் சாராபாய்
- 10வது தலைவர் – சோம்நாத்
- 9வது தலைவர் – சிவன்
இஸ்ரோ பற்றிய சில தகவல்கள்
- நிறுவியவர் : விக்ரம் சாராபாய்
- தொடங்கப்பட்ட ஆண்டு : 15.08.1969
- தலைமையகம் : பெங்களூரு
குடியரசு தின சிறப்பு விருந்தினர்
- 2025-ஆம் ஆண்டிற்கான குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்க உள்ளார்.
வர்தக கண்காட்சி
- உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் உணவுத் தொடர்பான இண்டஸ்புட் 2025 கண்காட்சி (Indusfood 2025) நடைபெற்றுள்ளது.
பாரத்போல்
- இந்தியாவில் குற்றம் புரிந்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசாங்கத்தால் பாரத்போல் (Bharatpol) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சோலார் திட்டம்
- ஓம்காரேஷ்வர் மிதக்கும் சோலார் திட்டம் மத்தியப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது.
- இத்திட்டம் நர்மதை நதி மீது தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- நர்மதை நதி நீளம் – 1312 கி.மீ.
- மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் மிக நீளமானது.
- காம்பே வளைகுடாவில் அரபிக்கடலில் கலக்கிறது.
- துணையாறுகள் – பர்னா, ஹலுன், ஹெரான், பஞ்சர், தூதி, சக்கார், டவா, கோலார்
சோலார் திட்டம்
- மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கிரேட் நிக்கோபார் தீவில் ரூ.72,000 கோடி மெகா உள்கட்டமைப்பு திட்டத்தில் புதிய சேர்த்தல்களை முன்மொழிந்துள்ளது.
முழு நேர உறுப்பினர்
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினராக இந்தோனேசியா இணைந்துள்ளது.
- இது 10வது உறுப்பினராக இணைந்துள்ளது.
பகதூர் சிங்
- இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவராக பகதூர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினம்
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas) – ஜனவரி 9