Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th July 2024

Daily Current Affairs

Here we have updated 9th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சத்ய நாராயணன்

Vetri Study Center Current Affairs - Satyanarayan

  • மத்திய அரசு அமல்படுத்திய மூன்று குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சத்ய நாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏரி-கண்மாய் மண் இலவசம்

  • விவசாயம், மண்பாண்டம் செய்வதற்கு தேவையான மண்ணை ஏரி மற்றும் கண்மாயில் எடுத்துக்கொள்ள இ-சேவை இணையதளம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
  • மண் அள்ள மாவட்ட ஆட்சியாளர் அனுமதி வழங்கி வந்த நிலையில் தற்போது வட்டாட்சியர் அனுமதி அளிப்பார்.

ஏ.அருண்

  • சென்னை பெருநகர காவல் துறை புதிய ஆணையராக ஏ.அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் 110வது சென்னை பெருநகர காவல் துறை ஆணையர்.
  • இதற்கு முன்பு சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பதவி வகித்த சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பிரிவு டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டேவிட்சன் தேவாசீர்வாதம்

  • தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வருடாந்திர உச்சி மாநாடு

  • இந்தியா-ரஷ்யா இடையேயான 22வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெற உள்ளது.
  • 21வது வருடாந்திர உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.

ஜோராவர் பீரங்கி

Vetri Study Center Current Affairs - Zorawar

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) மற்றும் எல்&டி ஆகியவற்றால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக பீரங்கியான ஜோராவர் (Zorawar) 2027-ல் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • Defence Research and Development Organisation – 1958
  • தலைமையகம் – புது தில்லி

குழு அமைப்பு

  • ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க பிரிஜேஷ் குமார் தலைமையில் ஹேமந்த் ராவ், பவேஷ் குமார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

எம்.கே.ரஞ்சித்சிங் வழக்கு

  • எம்.கே.ரஞ்சித்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உரிமை அடிப்படை உரிமை என்று கூறியது.
  • இதனை கிரேட் இந்தியன் பஸ்டர்டு வழக்கு எனவும் கூறப்படுகிறது.
  • விதி 14, விதி 21ன் படி பருவநிலை மாற்றம் என்பது அடிப்படை உரிமையென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யாரோஸ்லாவா மஹூசிக்

Vetri Study Center Current Affairs - Yaroslava Mahuchikh

  • உக்ரைன் நாட்டைச் சேர்ந்த யாரோஸ்லாவா மஹூசிக் உயரம் தாண்டுதலில் 210.1 மீ உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளார்.

Related Links

Leave a Comment