Daily Current Affairs
Here we have updated 9th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
- நவம்பர் 10-ல் 2வது கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை (Kalaignar Women’s Rights Allowance Scheme) தமிழக முதல்வர் துவங்கி வைக்க உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- 1வது கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: 15.09.2023
- பயனாளிகள்: 1,06,50,000
- இடம்: காஞ்சிபுரம்
நற்றமிழ் பாவலர் விருது 2022
- எழில்வாணன், சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகிய இருவருக்கும் நற்றமிழ் பாவலர் விருதானது (Natramil Pavalar Award) வழங்கப்பட்டுள்ளது.
- தமிழக வளர்ச்சி துறையானது இவ்விருதினை வழங்கியுள்ளது.
தமிழ்ப்பேசி
- தமிழ் மொழியை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் தமிழ்ப்பேசி (Tamilpesi) என்னும் செயலியானது துவங்கபட்டுள்ளது.
உடல் உறுப்பு தானம்
- தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளதென தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
- உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தால் இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் விருப்பப் பதிவு 2,700-ஆ அதிகரித்துள்ளது.
- உடல் உறுப்புதான திட்டம்: 2007-2008
கூட்டுறவு சங்க கிடங்குகள்
- இந்தியாவில் அதிக கூட்டுறவு சங்க கிடங்குகள் (Cooperative Warehouse) உள்ள மாநிலமாக தமிழ்நாடு செயல்படுகிறது.
மீனவ கூட்டுறவு வங்கி
- மீனவ மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க தமிழக அரசால் தூத்துக்குடியில் மீனவ கூட்டுறவு கடன் வங்கி (Fishermen’s Cooperative Credit Bank) துவங்கப்பட்டுள்ளது.
- இவ்வங்கி தமிழகத்தின் முதல் மீனவ கூட்டுறவு கடன் வங்கி ஆகும்.
சோலார் கூட்டணி
- சர்வதேச சோலார் கூட்டணியின் (ISA) சிலி 95வது உறுப்பினராக இணைந்துள்ளது.
- ISA – International Solar Alliance : 30.11.2015
பாரத் ஆர்கானிக்ஸ்
- இயற்கை வேளாண்மை விளைபொருட்களை விற்பனையானது பாரத் ஆர்கானிக்ஸ் (Bharat Organics’ brand)என்னும் பெயரில் துவங்கப்பட்டுள்ளது.
- இதனை மத்திய அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்தார்.
ஏவுகணை சோதனை
- தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் பிரளய் ஏவுகணையை (Pralay Missile) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- 500 கிலோ முதல் 1000 கிலோ எடை வரை எடையுள்ள குண்டுகளை சுமந்து செல்லும் தன்மை கொண்டது
- 350 கி.மீ முதல் 500 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
கின்னஸ் சாதனை
- கேரளாவின், பாலக்கோட்டில் வசிக்கும் பி.பாலசுப்பிரமணியன் மேனன் நீண்ட நாள் வழக்கறிராக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- 1950-ல் தன் பணியை தொடங்கிய அவர் 73 ஆண்டுகள், 60 நாட்களாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
பெயர் மாற்றம்
- உத்திர பிரதேசத்தில் அலிகர் மாவட்டத்தின் பெயரானது ஹரிகர் என மாற்றம் செய்யப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உத்திரப்பிரதேசம் – சிறை – சீர்த்திருத்த இல்லங்கள் என பெயர் மாற்றம்
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்
- நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் – பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்
- மங்களுர் விமான நிலையம் – மங்களூரு சர்வதேச விமான நிலையம்
- சண்டிகர் விமான நிலையம் – சாகித் பகத்சிங் சர்வதேச விமான நிலையம்
- அகமது நகர் – அகில்யா பாய் நகர்
- ஒளரங்கபாத் – சத்திரபதி சாம்பாஜி நகர்
- சர்ச் கேட் இரயில் நிலையம் – சி.டி. தேஷ்முக் ரயில் நிலையம்
வானவில் வாக்குச் சாவடி மையம் (Rainbow Polling Centre)
- சத்திஸ்கர், கங்கர் மாவட்டத்தின் பங்கஞ்சூரில் மாற்றுப்பாலினத்தவருக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
- சமூக அங்கீகாரம், தேர்தல் பங்களிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் வானவில் வாக்குச் சாவடி மையமானது உருவாக்கப்பட்டுள்ளது.
கலாகர் புரஸ்கர் விருது
- 19வது கலாகர் புரஸ்கர் விருதானது (Kalakar Puraskar Award) கொங்கணி பாடகர், பாடலாசரியர், இசையமைப்பாளரான அபோலினரிஸ் டிசோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
- மங்களூருவில் நடைபெற்ற கலாகர் புரஸ்கார் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய வில்வித்தை சாம்பியன் ஷிப் – தாய்லாந்து
- காம்பவுண்ட் ஆடவர் அணிகள் பிரிவில் அபிஷேக் வர்மா, பிரதமேஷ் ஃபுகே, பிரியன்ஷ் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
- ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் அங்கீதா பகத், பஜன் கவுர், திஷா புனியா ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்
தேசிய சட்ட சேவைகள் தினம் (National Legal Services Day) – Nov 09
உலக பயன்பாடு தினம் (World Usability Day) – Nov 09
- கருப்பொருள்: “Collaboration and Cooperation”
உத்தரகாண்ட் உருவான தினம் (Uttarakhand Formation Day) – Nov 09
- 09.11.2000-ல் உருவாக்கப்பட்டது
- உத்ராஞ்சல் என அழைக்கப்பட்டது.
- 2007-ல் உத்தரகாண்ட் என பெயர் மாற்றம்
- கடவுள்களின் தேசம் (or) தேவபூமி
உலக சுதந்திர தினம் (World Freedom Day) – Nov 09
November-7 Current Affairs | November-8 Current Affairs