Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th November 2024

Daily Current Affairs

Here we have updated 9th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

இன்னுயிர் காப்போம் திட்டம்

  • தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியானது 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் விபத்திற்குள்ளானவர்களுக்கு 48 மணி நேர சிகிச்சை செலவுகளை தமிழக அரசே ஏற்று கொள்கிறது.

தலைமை தேர்தல் அதிகாரி

Vetri Study Center Current Affairs - Archana Patnaik

  • தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • தேர்தல் ஆணையம் பற்றி பகுதி XV-ல் விதி 324 முதல் 329 வரை கூறப்பட்டுள்ளது.

செல்வராஜன்

  • 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதானது செல்வராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது – சுசிலா, மு.மேத்தா
  • கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது 2023 – ராமசாமி

பாம்புக்கடி

  • தமிழக அரசு பாம்புக்கடியை அறிவிக்கை செய்ய கூடிய நோயாக (Notified Disease) அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2030 ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடியினால் ஏற்படும் மரணத்தை பாதியாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
  • 2023ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதானது வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • வெப்ப அலையை பேரிடராக அறிவித்துள்ள மாநிலம் – தமிழகம்

ஜெட் ஏர்வேஸ்

  • நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கலைக்கப்பட்டுள்ளது.
  • அரசமைப்பு விதி 142-ன் கீழ் இந்த நிறுவனமானது கலைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுதில்லி

  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்திய ராணுவ பாராம்பரிய விழா புதுதில்லியில் நடைபெற்றது.
  • முப்படைகளின் தளபதி – அனில் செளகான்

ஒருங்கிணைந்த செக்போஸ்ட்

  • இந்தியா-பூடான் எல்லையில் முதல் ஒருங்கிணைந்த செக்போஸ்ட் அசாம் மாநிலத்தில் தொடங்ப்பட்டுள்ளது.
  • பூடான் இந்தியாவுடன் 578 கி.மீ. எல்லையை பகிர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா 15,200 கி.மீ நில எல்லைகளைக் கொண்டுள்ளது.

  • மேலும் இந்தியா அதிகபட்சமாக வங்காள தேசத்துடன் 4,156 கி.மீ நீளமுள்ள நில எல்லையை பகிர்ந்|து கொள்கிறது. (குறிப்பு – இந்தியாவின் சர்வதேச உறவுகள் பாடத்தின் படி இந்தியாவும் வங்காளதேசமும் 4,096.7 கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட நிலப்பரப்பை எல்லையாகப் பகிர்ந்து கொள்கின்றன.)
  • குறுகிய எல்லையாக ஆப்கானிஸ்தானுடன் 106 கி.மீ நில எல்லையையும் கொண்டுள்ளது.

ரோகினி நய்யார் விருது 2024

Vetri Study Center Current Affairs - Anil Pradhan

  • ஒடிசாவின் அனில் பிரதானுக்கு 2024ஆம் ஆண்டிற்கான  ரோகினி நய்யார் விருது வழங்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் 

  • ஈரான் நாடானது கவ்சர் மற்றும் ஹுதுட் செயற்கைக்ககோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

ஆஸ்திரஹிந்த்-III

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சியான ஆஸ்திரஹிந்த்-III மகாராஷ்டிராவில் நடைபெற்றது.

பனிப்பொழிவு

  • சவுதி அரேபியாவின் அல்ஜாப் பகுதியிலுள்ள பாலைவனத்தில் பனிப்பொழிவு பெய்துள்ளது.
  • பாலைவனத்தில் பனிப்பொழிவு பெய்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

சட்டம் இயற்றுதல்

  • வன்முறையில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களை காசா பகுதிகளுக்கு நாடு கடத்த இஸ்ரேல் சட்டமியற்றியுள்ளது.

ஆஸ்திரேலியா

  • ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்துள்ளது.
  • குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்துள்ள முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

அர்ஜுன் எரிகைசி

Vetri Study Center Current Affairs - Arjun Erigaisi

  • செஸ் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக அர்ஜுன் எரிகைசி உலக தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

முக்கிய தினம்

தேசிய சட்ட சேவைகள் தினம் (National Legal Services day) – நவம்பர் 9

உலக சுதந்திர தினம் (World Freedom day) – நவம்பர் 9

Related Links

Leave a Comment