Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th September 2023

Daily Current Affairs

Here we have updated 9th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதல் பெண் விமானி

Vetri Study Center Current Affairs - Jayashree

  • இந்திய அளவிலான பைலட் தேர்வில் வெற்றி பெற்று படுகர் இனத்தின் முதல் பெண் விமானியாக நீலகிரி மாவட்டத்தின் ஜெயஸ்ரீ சாதனை படைத்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

Vetri Study Center Current Affairs -Ambedkar Industrial Pioneers Scheme

  • இத்திட்டத்தின் கீழ் 28,102 பேர் புதிய தொழில் முனைவோர் உருவாக்கபட்டுள்ளன. ரூ.770 கோடி மானியத்துடன் ரூ.2,134 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு 35% மானியத்துடன் கடனுதவி வழங்கும் திட்டமாகும்.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையால் செயல்படுத்தப்படுகிறது.

தானிய சேமிப்பு கிடங்குகள்

  • தமிழகத்தில் நெல், தானிய வகைகளை சேமித்து வைக்க ரூ.7.20 கோடி மதிப்பீட்டில் 3 தானியக் கிடங்குகளை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்
இடம்செலவுகொள்ளளவு
திருவப்பூர் (புதுக்கோட்டை)ரூ.2.80 கோடி3,400 மெட்ரிக் டன்
சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் (ராணிப்பேட்டை)ரூ.2.20 கோடி3,400 மெட்ரிக் டன்
திருமங்கலம் கப்பலூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் (மதுரை)ரூ.2.20 கோடி3,400 மெட்ரிக் டன்

வீரா வாகன திட்டம் (VEERA)

Vetri Study Center Current Affairs - VEERA

  • இந்தியாவில் முன்னோடி திட்டமாக சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க வீரா வாகன சேவையை தமிழக முதல் துவங்கி வைத்துள்ளார்.
  • VEERA – Vehicle for Extrication in Emergency Rescue and Accidents
  • ஹூண்டாய் குளோவில் மற்றம் இசுசூ மோட்டார் நிறுவனங்கள் இணைந்து இவ்வாகனத்தை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் உருவாக்கியுள்ளது.

பெயர் மாற்றம்

Vetri Study Center Current Affairs - Agricultural College and Research Institute, Thoothukudi

  • வ.உ.சிதம்பரனார் நினைவாக தூத்துக்குடி கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியின் பெயரானது வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இக்கல்லூரியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

சிலை திறப்பு

Vetri Study Center Current Affairs - rabindranath tagore Statue

  • சென்னை ராணிமேரி கல்லூரியில் கவிஞர் ரவிந்திரநாத் தாகூர் சிலையானது தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சென்னை காந்தி மண்டப வளாகத்தில் ப.சுப்பராயனின் (சென்னை மாகாண முன்னாள் முதல்வர்) உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது
    புதுதில்லி ராஜ்காட்டில் காந்தி தர்ஷன் தோட்டத்தில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.

வி. அருண்ராய்

Vetri Study Center Current Affairs - V. Arun Roy

  • தமிழக அரசின் தொழிற்துறை செயலாளராக வி.அருண்ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிராக் கேடி (Track KD)

Vetri Study Center Current Affairs - Track KD

  • தமிழக காவல்துறை ரெளடிகளை கண்காணிக்க பயன்டும் டிராக் கேடி செயலிக்கு தேசிய குற்ற ஆவணக் காப்பக பதக்கம் கிடைத்துள்ளது.
  • டிராக் கேடி செயலி – 25.12.2022

12 அம்ச திட்டங்கள்

Vetri Study Center Current Affairs - asean-india summit 2023

  • இந்தோனிசியா ஜகர்தாவில் 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு நடைபெற்றுள்ளது.
  • இம்மாநாட்டில் இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்த பிரதமர் மோடி 12 அம்ச திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

ஓப்பந்தம் 

Vetri Study Center Current Affairs - C-295 Transport Aircraft

  • இந்தியா ஏர்பஸ் நிறுவனத்துடன் சி-295 போக்குவரத்து ரக விமானங்களை (C-295 Transport Aircraft) வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

G20 உச்சி மாநாடு

  • செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடானது தில்லியில் நடைபெறுகிறது.
  • ஜி20 மாநாட்டிற்கான கருப்பொருள் One Earth One Family One Future ஆகும்.
  • ஜி20 என்பது 19 நாடுகளும் ஒரு யூரோப்பிய யூனியனும் சேர்ந்து 26.09.1999-ல் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.
  • 01.12.2022 முதல் 30.11.2023 வரை இந்தியா G20 கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றுள்ளது
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு 2023 இந்தியா தலைமையில் நடைபெற்றுள்ளது.
  • G7 உச்சி மாநாடானது ஜப்பானில் நடைபெற்றுள்ளது.

வடகொரியா

Vetri Study Center Current Affairs - Hero Kim Kun ok

  • அணு ஆயத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட  நீர் மூழ்கி கப்பலான ஹீரோ கிம் குன் ஆக் எனும் கப்பலை வட கொரியா உருவாக்கியுள்ளது
  • அணு ஆயுதங்களை ஏந்தி சென்று எதிரிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளன.

உலக முதலுதவி தினம் (World First Aid Day) – Sep 09

Vetri Study Center Current Affairs - World First Aid Day

  • கருப்பொருள்: “First Aid in the Digital World”

தாக்குதலிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் (International Day to Protect Education From Attack) – Sep 09

Vetri Study Center Current Affairs - International Day to Protect Education From Attack

September 07 Current Affairs | September 08 Current Affairs

Leave a Comment