Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th to 11th March 2025

Daily Current Affairs

Here we have updated 9th to 11th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆண்டு விழா

  • சமீபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் மண்டல பயிற்சி மையத்தின் 56வது ஆண்டு விழா நடைபெற்றுள்ளது.
  • தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் மண்டல பயிற்சி மையத்தின் பெயர் ராஜாதித்திய சோழன் ஆகும்.

சாகித்ய அகாடமி விருது

  • தமிழில் சாகித்ய அகாடமி விருதிருனை ஏ.ஆர்.வெங்கடாசலபதி வென்றுள்ளார்.
  • தமிழில் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதிருனை விமலா வென்றுள்ளார்.

அவ்வையார் விருது 2025

  • டாக்டர் யசோதா சண்முகசுந்தரத்திற்கு அவ்வையார் விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச மகளிர் தினத்தன்று இவ்விருது வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8

சிறந்த பெண் குழந்தை விருது 2025

  • செளமியா என்பவருக்கு சிறந்த பெண் குழந்தை விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.

மாதவ் தேசிய பூங்கா

  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்காவானது இந்தியாவின் 58வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிக புலிகள் காப்பகம் உள்ள மாநிலம் – மத்தியப்பிரதேசம்

பசு மருந்தகங்கள்

  • கால்நடைகளுக்கான பசு மருந்தங்களை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பொதுவான கால்நடை மருந்துகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

கிக் தொழிலாளர்கள்

  • சுகாதார சலுகைகளை கிக் தொழிலாளர்கள் பெற இ-ஷ்ரம் போர்டலில் பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்த சுகாதார சலுகைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது.

தற்கால நீதிபதி

  • தற்காலிக நீதிபதிகளை நியமிப்பில் குடியரசுத்தலைவர் கையெழுத்து இடுவதில்லை. ஆனால் ஒப்புதல் அளிக்கிறார்.
  • விதி 127 – உச்ச நீதிமன்ற தற்கால நீதிபதி
  • விதி 224 A – உயர் நீதிமன்ற தற்கால நீதிபதி

வணிக விண்வெளி கண்காணிப்பு செயற்கைகோள்

  • உலகின் முதல் வணிக விண்வெளி கண்காணிப்பு செயற்கைகோள் SCOT 1 தன்னுடைய செயல்பாட்டினை தொடங்கியுள்ளது.
  • இச்செயற்கைக்கோளை இந்திய ஸ்டார் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

டூரிங் விருது 2024

  • அண்ட்ரூ ஜி. பார்டோ, ரிச்சர்ட் எஸ்.சுட்டன் ஆகியோருக்கு டூரிங் விருது 2024 (A.M. Turing Award) வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

CISF நிறுவன தினம் (CISF Raising Day) – மார்ச் 10

  • Central Industrial Security Force – 1969

Related Links

Leave a Comment