Daily Current Affairs
Here we have updated 11th & 12th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வெம்பக்கோட்டை அகழாய்வு
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால சதுரங்க ஆட்டக் காய்கள் கிடைத்துள்ளன.
டி.வி.சாமிநாதன்
- இந்திய அமைச்சரவை செயலாளராக டி.வி.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டார்ட்அப் தமிழ்நாடு சர்வதேச ஒருங்கிணைப்பு மையம்
- ஸ்டார்ட்அப் தமிழ்நாடு சர்வதேச ஒருங்கிணைப்பு மையம் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது.
- மேலும் இரு மையங்கள் அமெரிக்கா, சிங்கப்பூரில் தொடங்கப்பட உள்ளது.
- ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (Startup TN – 2021)
திரெளபதி முர்மு
- திமோர் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் காலர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருதானது வழங்கப்பட்டுள்ளது.
Haati செயலி
- யானைகள் மனிதர்கள் இருக்கும் இடம் அருகில் வருவதை எச்சரிக்கை செய்ய Haati செயலியை அசாம் மாநிலம் தொடங்கியுள்ளது.
மித்ரா சக்கி
- இந்தியா மற்றும் இலங்கை இடையே மித்ரா சக்தி (Mitra Shakti) எனும் கூட்டு ராணுவப் பயிற்சியானது நடைபெற்றுள்ளது.
இரட்டை கோபுர அனல்மின் நிலையம்
- உலகின் முதல் இரட்டை கோபுர அனல்மின் நிலையத்தினை சீனா உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலகில் முதன் முதலாக தோரியம் உருகிய உப்பு அணுமின் நிலையத்தை கோபி பாலைவனத்தில் கட்ட உள்ளது.
பர்டோ அல்லா கரியரா விருது
- சுவிட்சர்லாந்து நாட்டில் வழங்கப்படும் சினிமாவிற்கான உயரிய விருதான பர்டோ அல்லா கரியரா விருது ஷாருக்கானிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் இந்தியா பதக்கப்பட்டியிலில் (1 வெள்ளி, 5 வெண்கலம்) 71வது இடத்தை பிடித்துள்ளது.
- இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 41 பதக்கக்ளை வென்றுள்ளது.
- முதலிடம் – அமெரிக்கா
- இரண்டாமிடம் – சீனா
- அண்டை நாடான பாகிஸ்தான் 62வது இடத்தை பிடித்துள்ளது.
முக்கிய தினம்
சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day) – ஆகஸ்ட் 12
உலக யானைகள் தினம் (World Elephant Day) – ஆகஸ்ட் 12
- தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை – 3063
- இந்தியாவின் பாரம்பரிய விலங்கு – யானை (2010)
- இந்தியாவின் முதல் யானைகள் சரணலாயம் – சிங்பம் (Singhbhum). ஜார்க்கண்ட்
- யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டையை குறைக்கும் திட்டம் – “திட்டம் கஜா கோதா (Project Gajah Kotha)” – அசாம்
- கஞ்உத்சவ் (யானைகள் திருவிழா) – அசாம்
- யானைகள் அதிகமாக இரயில் அடிப்பட்டு இறக்கும் மாநிலம் – அசாம்
- யானைகள் அதிகம் உள்ள மாநிலம் – கர்நாடகா
தமிழகத்திலுள்ள யானைகள் காப்பகம்
- அகத்தியர் மலை யானைகள் காப்பகம்
- முதுமலை யானைகள் காப்பகம்
- ஆனைமலை யானைகள் காப்பகம்
- ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் காப்பகம்
- நீலம்பூர் யானைகள் காப்பகம்