Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th & 17th August 2024

.Daily Current Affairs

Here we have updated 16th & 17th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதல்வர் மருந்தகம்

  • 15.08.2024-ல் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து பொருட்கள் கிடைப்பதற்காக தமிழக அரசு முதல்வர் மருந்தம் என்னும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

அப்துல்கலாம் விருது

  • சந்திராயன்-3 மிஷன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.

கல்பனா சாவ்லா விருது

Vetri Study Center Current Affairs - Sabina

  • 2024-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதானது செவிலியர் A.சபீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது துணிச்சலாக சேவையாற்றியதை போற்றும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் விருது

  • சிறந்த மாநகராட்சி – கோவை
  • சிறந்த நகராட்சி – திருவாரூர்
  • சிறந்த மண்டலம் – சென்னை மாநகராட்சியின் 14வது மண்டலம்
  • சிறந்த பேரூராட்சி – சூலார் (கோவை)

தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழா

  • 3வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவானது செங்கல்பட்டில் நடைபெற்றுள்ளது.

அத்திக்கடவு – அவினாசி திட்டம்

  • ஆகஸ்ட் 17-ல் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடங்கி வைத்துள்ளார்.
  • இத்திட்டத்திற்கு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காளிங்கராயன் அணை வழியே இத்திட்டதிற்கு நீர் வழங்கப்படுகிறது.
  • இத்திட்டத்திற்கான கோரிக்கை 1972 முதல் வைக்கப்பட்டு வந்தது.
  • இத்திட்டமானது கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு பயனளிக்கிறது.

ராகுல் நவீன்

Vetri Study Center Current Affairs - Rahul Navin

  • அமலாக்கத் துறையின் புதிய இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்

மாதவிடாய் விடுமுறை

  • ஒடிசாவில் அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் மாதவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மத்தியபிரதேச மாநிலத்தில் பெண் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வாங்க பணம் வழங்கப்படுகிறது.

அண்ணா கேண்டீன்

  • ஆந்திராவில் அண்ணா கேண்டீன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

R.N. அகர்வால்

  • அக்னி ஏவுகணையின் தந்தையான R.N. அகர்வால் சமீபத்தில் காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஏவுகணை தந்தை – அப்துல்கலாம்
  • ஏவுகணை பெண்மணி – டெசி தாமஸ்

புதிய செயலி

  • வெள்ளத் தகவலை அறிய Flood Watch India 2.0 என்ற செயலியை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

குரங்கம்மை நோய் (Mpox)

  • உலக சுகாதார நிறுவனம் குரங்கம்மை நோயினை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்துள்ளது.
  • இந்நோயின் பாதிப்பு காங்கா நாட்டிலிருந்து உருவானது.

பேடோங்டரன் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra)

Vetri Study Center Current Affairs - Paetongtarn Shinawatra

  • தாய்லாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மோர்ன் மோர்கெல்

  • இந்திய கிரிக்கெட் அணியின் பெளலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்ன் மோர்கெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செஸ் சாம்பியன் போட்டி

  • உலக செஸ் சாம்பியன் போட்டி சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

சுதா சேஷய்யன்

  • உயிரற்ற உயிர் என்னும் நூலினை எழுதியுள்ளார்

 

 

முக்கிய தினம்

ஆப்கானிஸ் சுதந்திர தினம் (Afghanistan Independence Day) – ஆகஸ்ட் 17

சில குறிப்புகள்

  • வக்ஃபு சட்டம் – 1995
  • கடலின் தூய்மையாளர் – இறால் மீன்

Related Links

Leave a Comment