Daily Current Affairs
Here we have updated 19th to 20th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
- 12வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடானது வாஷிங்டன் (அமெரிக்கா) டி.சியில் நடத்தப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 11வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு – கோலாம்பூர் (மலேசியா)
சுற்றுலா மேம்பாடு
- தமிழகத்தின் சுற்றுலா மேம்பாட்டில் திருச்சி முதன்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரை
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் – விதி 217, 224
- உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம் – விதி 124
- தற்கால நீதிபதி நியமனம் – விதி 127
சுவாமி சாட்பாட் செயலி
- தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சுவாமி சாட்பாட் என்னும் வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள செயலிகள்
App Name | Date |
உழவன் செயலி | 05.04.2018 |
டிராக் கேடி செயலி | 25.12.2022 |
மெடிகோலீகல் கேஸ் இன்டிமேசன் சிஸ்டம் செயலி | 10.05.2023 |
இல்லம் தேடி பிரசாதம் செயலி | 18.05.2023 |
திருக்கோயில் செயலி | 18.05.2023 |
இ-பெட்டகம் கைபேசி செயலி | 13.06.2023 |
COOP BAZAAR செயலி | 06.07.2023 |
மக்களுடன் ஸ்டாலின் செயலி | 17.09.2023 |
TATO-App | 29.10.2023 |
டி.டி.எஸ் நண்பன் | 20.07.2023 |
இ சரஸ் (e SARAS) செயலி | 05.07.2023 |
தமிழ்ப்பேசி (Tamilpesi) | 09.11.2023 |
இ-லியர்னிங் (e-learning) | 14.11.2023 |
நம்ம சாலை செயலி | 01.11.2023 |
தலைமை கணக்கு தணிக்கையாளர்
- இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக சஞ்சய் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தலைமை கணக்கு தணிக்கையாளர் – விதி 148
இணைய குற்றங்கள்
- இணைய குற்றங்கள் தொடர்பாக கட்டணமில்லா எண்னான 1930 மூலம் புகார் அளிக்கலாம்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை
- அணு ஆயுதங்களுடன் 1500 கி.மீ தொலைவுக்கு மேல் பாய்ந்து தாக்கும் வலிமை கொண்ட இந்தியாவின் முதல் தொலைவு ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது ஒடிசாவின் பாலசோரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
G 20 தலைமை
- பிரேசில் நாட்டு அதிபரான லூலா டா சில்வா G20 கூட்டமைப்பிற்கு தலமை வகித்துள்ளார்.
கிங் காேப்ரா
- கிங் கோப்ரா கர்நாடகா மாநிலத்தில் கலிங்க சர்பா என்று அழைக்கப்படுகிறது.
- இதன் அறிவியில் பெயர் – ஓபியாபேகஸ் கலிங்கா
பூர்வி பிரஹார்
- பூர்வி பிரஹார் என்னும் பெயரில் இந்தியாவின் முப்படை பயிற்சியானது அருணாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மத்திய அரசு திட்டம்
- அந்தமான் & நிக்கோபர் தீவுகளை இந்தியாவின் சூரை மீன் ஏற்றுமதி மையமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சிறந்த காவல் நிலையம் 2024
- இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக ஒடிசாவின் படாபூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2023-ம் ஆண்டு சிறந்த காவல் நிலையம் – ராஜேந்திர நகர் (தெலுங்கானா)
- 2022-ம் ஆண்டு சிறந்த காவல் நிலையம் – அஸ்கா (ஒடிசா)
- 2021-ம் ஆண்டு சிறந்த காவல் நிலையம் – சதர் பஜார் (டெல்லி)
ஹரினி அமரசூரிய
- இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
கோ கோ போட்டி
- இந்தியாவின் தனது முதல் கோ கோ போட்டியை 2025-ம் ஆண்டில் நடத்த உள்ளது.
இலக்கு நிர்ணயம்
- பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணியானது பசி மற்றும் வறுமையை ஒழிக்க 2030-ஐ இலக்காக நிர்ணயித்துள்ளது.
ADB ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி
- ADB ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் யானிக் சின்னர் (இத்தாலி) சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
டாடா ஸ்டீல் செஸ் போட்டி
- மேற்கு வங்கத்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சென் (நார்வே) வென்றுள்ளார்.
முக்கிய தினம்
தேசிய ஒருமைப்பாடு தினம் (National Integration Day) – நவம்பர் 19
உலகளாவிய குழந்தைகள் தினம் (Universal Children’s Day) – நவம்பர் 20
CA 🔥🔥