Daily Current Affairs
Here we have updated 19th and 20th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நீர்நிலை பாதுகாவலர் விருது
- தமிழகத்தின் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும்தனி நபர்கள், தன்னார்வலர்களுக்கு முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி
- விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறிய AI ஸ்கேனர் கருவியை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புதுதில்லி
- 8வது இந்தியா நீர் வார மாநாடு புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.
- செப்டம்பர் 19-21வரை புதுதில்லியில் சர்வதேச உணவும் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் மாநாடு நடைபெறுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அவ்வாறு லோக்சபா, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் விதி 83, விதி 172 திருத்தப்பட வேண்டும்.
- விதி 83 – நாடாளுமன்ற அவைகளில் காலம்
- விதி 172 – மாநில சட்டப்பேரவை காலம்
மிஷன் மெளஸம்
- தீவிர வானிலை நிகழ்வுகளை கணிக்க மிஷன் மெளஸம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
- புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இத்திட்டம் செய்படுத்தப்பட உள்ளது.
உத்யம் தளம்
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முன்னிலைப்படுத்த உத்யம் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
NPS வாத்சல்யா
- குழந்தைகளின் ஓய்வூதியத்துக்காக பெற்றோர் சேமிக்கக்கூடிய NPS வாத்சல்யா ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- NPS வாத்சல்யா – 18.09.2024
சிந்து நதிநீர் ஒப்பந்தம்
- இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தமானது 19.09.1960-ல் உருவாக்கப்பட்டது.
பயோ-ரைட் திட்டம்
- உயரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைதல் மேம்பாடு ஆகிய இரு திட்டங்களை ஒருங்கிணைத்து பயோ-ரைட் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பணிக்குழு விருது
- தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ஐ.நா.வின் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருது 2024 வழங்கப்பட்டுள்ளது.
பி.எம் – ஆஷா
- அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்ற இரக்கத்தை கட்டுப்படுத்தி சிறந்த விலை கிடைப்பதை உறுதி செய்ய பி.எம் – ஆஷா (PM – AASHA) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பாரதிய அந்தரிக்ஷா நிலையம்
- இந்தியாவிற்கு சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 2035க்குள் பாரதிய அந்தரிகஷ் நிலையத்தை உருவாக்க இந்தியா விரும்புகிறது.
- இந்தியா 2040-க்குள் சந்திராயன் 4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது.
மோகனா சிங்
- தேஜாஸ் போர் விமானத்தை இயக்கிய முதல் இந்திய பெண் விமானி மோகனா சிங் ஆவார்.
கூடுதல் தகவல்கள்
- மக்கள் தொகை கணக்கெடுப்பு – 1881
- ஜன்தன் திட்டம் – 2014