Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st and 2nd December

Daily Current Affairs

Here we have updated 1st and 2nd December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கூட்டுறவு துறை

  • வேர்கள் மற்றும் விழுதுகள் திட்டத்தினை கூட்டுறவுத்துறை அறிமுகம் செய்துள்ளது.
  • வேர்கள் திட்டம் – கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம்.
  • விழுதுகள் திட்டம் – கூட்டுறவில் வேலை செய்யும் பணியாளர்களுகாக தொடங்கப்பட்ட திட்டம்.

உதயம் தளம்

Vetri Study Center Current Affairs - Udyam Portel

  • மத்திய அரசின் உதயம் தளத்தின் கீழ் பெண்கள் நடத்தும் சிறு தொழில்களின் தரவரிசையில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.
  • உதயம் தளம் – 01.07.2020

கால்நடை காப்பீடு திட்டம்

  • கேரள மாநிலமானது கால்நடை காப்பீடு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

சின்பாக்ஸ்

  • இந்தியா மற்றும் கம்போடியா இடையே நடைபெறும் கூட்டுராணுவப் பயிற்சியான சின்பாக்ஸ் (CINBAX) மகாராஷ்டிராவில் நடைபெறுகிறது.

புவிசார் குறியீடு

  • குஜராத்தில் தயாரிக்கப்படும் கர்ச்சோலா கைவினைப்பொருட்களுக்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • குஜராத்தில் தற்போது வரை 27 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • புவிசார் குறியீட்டில் 58 பொருட்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் “பொருள்கள் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999 கொண்டு வரப்பட்டு 2003-ல் செப்டம்பர் 15-முதல் நடைமுறைக்கு வந்தது.
  • உலகில் முதன் முறையாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு (2004) வழங்கப்பட்டது

இந்தியா தேர்வு

Vetri Study Center Current Affairs - UN Peace Commission

  • 2025-26ஆம் ஆண்டிற்கான ஐ.நா. அமைதிக்கான ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.
  • ஐ.நா. அமைதி ஆணையம் – 2005

விவசாய கழிவுகள்

  • விவசாய கழிவுகள் அதிகமாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவு எரிப்பதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) அறிக்கை தெரிவித்துள்ளது.
  • ICAR – 16.07.1929

அஷ்டலட்சுமி மஹோத்ஸ்வ விழா

  • அஷ்டலட்சுமி மஹோத்ஸ்வ விழாவானது புது தில்லியின் பாரத் மண்டபத்தில் வைத்து கொண்டாடப்பட உள்ளது.
  • இவ்விழாவானது அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், திரிபுரா, சிக்கிம் போன்ற எட்டு வடகிழக்கு மாநிலங்களால் கொண்டாடப்படுகிறது.

நெட்வொர்க் தயார் நிலை குறியீடு 2024

  • நெட்வொர்க் தயார் நிலை குறியீடு 2024 பட்டியலில் இந்தியா 49வது இடத்தை பிடித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இது வரை 35.89 கோடி காப்பீட்டு அட்டைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டம் – 2018

கருணைக்கொலை

  • சமீபத்தில் பிரிட்டன் நாடாளுமன்றம் கருணைக்கொலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது

தொடர்புடயை செய்திகள்

  • இந்தியாவில் 2018-ல் உச்சநீதிமன்றம் இயற்கையான கருணை மரணத்தை (Passive Euthanasia) சட்டப்பூர்வமாக்கியது.
  • இயற்கை மரணம் குறித்த வழக்கு – அருணா சண்பாக் (2018)

பெண்கள் கொலை

  • உலகம் முழுவதிலும் நாள் ஒன்றுக்கு 140 பெண்கள் தங்கள் குடுபத்தினாரால் கொலை செய்யப்படுவதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
  • 2022-ல் பெண்கள் இறப்பு எண்ணிக்கை- 48,800
  • 2023-ல் பெண்கள் இறப்பு எண்ணிக்கை- 51,100

ஒகோன்ஜோ – இவேலா

Vetri Study Center Current Affairs - Okonjo Iweala

  • உலக வர்த்தக அமைப்பின் தலைவியாக நைஜிரிய நாட்டின் ஒகோன்ஜோ – இவேலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • உலக வர்த்தக அமைப்பு – 01.01.1995
  • தலைமையகம் – ஜெனிவா (சுவிட்சர்லாந்து)

இந்தியா காரிகோம் உச்சி மாநாடு

  • 2வது இந்தியா காரிகோம் உச்சி மாநாடானது கயானாவில் நடைபெற்றது.

காடு வளர்ப்பு முயற்சி

  • சீனா நாடானது உலகின் மிகப்பெரிய காடு வளர்ச்சி முயற்சியை தக்லமாகன் பாலைவனத்தில் தொடங்கியுள்ளது.

முக்கிய தினம்

உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) – டிசம்பர் 1

  • கருப்பொருள்: Take the Right Path: My Health My Right

தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம் (National Pollution Day) – டிசம்பர் 2

சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினம் (International day the Abolition) – டிசம்பர் 2

உலக கணினி அறிவு தினம் (World Computer Literacy Day) – டிசம்பர் 2

Related Links

Leave a Comment