Daily Current Affairs
Here we have updated 1st and 2nd September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வெம்பக்கோட்டை அகழாய்வு
- விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில் அலங்கரிகப்பட்ட முழு சங்கு வளையல் கண்டறியப்பட்டுள்ளது.
பெரியார் விருது
- இயற்கை விவசாயியான பாப்பாம்மாளுக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் சில விருதுகள்
- அண்ணா விருது – அறந்தாங்கி மிசா இராமநாதன்
- கலைஞர் விருது – ஜெகத்ரட்சகன்
- பாவேந்தர் விருது – கவிஞர் தமிழ்தாசன்
- பேராசிரியர் விருது – வி.பி.ராஜன்
நீரேற்றுத் திட்டம்
- தமிழகத்தில் விவசாயத்திற்காக உருவாக்கப்பட்ட முதல் நீரேற்று திட்டமாக அத்திக்கடவு-அவிநாசி திட்டம் உள்ளது.
AI ஆய்வகங்கள்
- AI ஆய்வகங்களை அமைப்பதற்காக தமிழ்நாடு கூகுளுடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் AI ஆய்வகங்கள் மூலம் 20லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறப்பு நாணயம் வெளியீடு
- உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் தபால்தலை மற்றும் ரூ.75 சிறப்பு நாணயம் வெளியிட்ப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 1964-ல் முதல் நாணயம் ஜவஹர்லால் நேருவை பெருமைபடுத்தும் விதமாக ரூ. 1 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
- 1995-ல் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டிற்காக ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- 2022-ல் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு ரூ.2,நாணயம் வெளியிடப்பட்டது.
நாணயம் | தலைவர் | ஆண்டு |
ரூ.1 | அம்பேத்கர் | 1990 |
ரூ.50 | சுபாஷ் சந்திர போஸ் (நூற்றாண்டு) | 1997 |
ரூ.5 | காமராஜர் (நூற்றாண்டு) | 2004 |
ரூ.5 | அறிஞர் அண்ணா (நூற்றாண்டு) | 2009 |
ரூ.5 | எம்.ஜி.ஆர் (நூற்றாண்டு) | 2019 |
ரூ.100 | கலைஞர் (நூற்றாண்டு) | 2024 |
- அறிஞர் அண்ணா நினைவு நாணயத்தில் அவரின் பெயர் அண்ணாதுரை என்ற கையெழுத்து இடம் பெற்றுள்ளது.
- கலைஞர் நினைவு நாணயத்தில் அவரின் பெயர் தமிழ் வெல்லும் என்ற சொற்களும் இடம் பெற்றுள்ளது.
ஹிமா கோலி ஓய்வு
- உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி ஓய்வு பெற்றுள்ளார்.
டி.வி.சீனிவாசன்
- கேபினட் செயலாளராக டி.வி.சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சூறாவளி
- ஆகஸட் 16-ல் வங்கக் கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற உள்ளது.
- இப்புயலுக்கு பாகிஸ்தான் அஸ்னா சூறாவளி என்று பெயர் சூட்டியுள்ளது.
- அஸ்னா என்பதற்கு பொருள் To be acknowledged Praised (புகழ்ச்சி)
- இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் 1944, 1964, 1976 புயல்கள் உருவாகியுள்ளன.
டிராகுலா எறும்பு
- உலகத்தில் அதிவேகமாக செல்லும் உயிரினமாக டிராகுலா எறும்பு உள்ளது.
- இத்தகவலை தி கார்டியன் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
- இது நொடிக்கு 90மீ வரை பயணிக்கும் ஆற்றல் பெற்றவை.
பனி உருக்கம்
- புவி வெப்பமடைதல் காரணமாக உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஓம் பர்வத் மலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகியுள்ளது.
நாமன் திட்டம்
- இந்திய ராணுவத்திற்காக நாமன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்திய ராணுவத்தினரின் பென்சனிற்காக தொடங்கப்பட்டுள்ளது.
பசுபிக் தீவு மன்றக் கூட்டம்
- டோங்கா என்னும் தீவில் பசுபிக் தீவு மன்றக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
- பசுபிக் தீவு மனறம் 1971-ல் உருவாக்கப்பட்டது.
- இதில் 18 உறுப்பினர்கள் உள்ளன.
நமிபியா
- நமிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக யானை, வரிக்குதிரை, காட்டெருமை, மான் போன்ற விலங்குகளை வேட்டையாட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பார்முலா கார் பந்தயம்
- சென்னையில் நடைபெற்ற பார்முலா கார் பந்தயத்தில் ஹைதரபாத் அணியின் அலிபாய் முதலிடம் பிடித்துள்ளார்.
- 2வது இடம் – திவி நந்தன் (அகமதாபாத் அணி)
- 3வது இடம் – ஜேடன் பாரியாட் (பெங்களூர் அணி)
- தெற்காசியாவில் நடைபெற்ற முதல் இரவு பார்முலா கார் பந்தயம் ஆகும்.
பாரா ஒலிம்பிக் போட்டி
- உயரம் தாண்டுதல் – நிஷாத் குமார் – வெள்ளி பதக்கம்
- பெண்களுக்கான 200மீ டி35 – பிரீத்தி பால் – வெண்கலம்
முக்கிய தினம்
- உலக தேங்காய் தினம் (World Coconut Day)