Daily Current Affairs
Here we have updated 22nd and 23rd October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது
- GDP – Gross Domestic Product
டானா புயல்
- வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள புயலிற்கு டானா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இப்புயலுக்கு கத்தார் நாடானது டானா என பெயர் சூட்டியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கடந்த ஆண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயல் சென்னையை பாதித்துள்ளது.
- இந்தியாவில் அஸ்னா புயல் உருவானது
- வியட்நாம் – யாகி புயலால் பாதிப்பு
- கியூபா – ஹெலின் புயலால் பாதிப்பு
- ஜப்பான் – ஷான்ஷன் புயலால் பாதிப்பு
- அமெரிக்கா – மில்டன் புயலால் பாதிப்பு
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- கிழக்கு லடாக்கில் உள்ள தெம்சோக் மற்றும் தெப்சாங் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள எல்லைக்கோடு – மக்மஹோன் கோடு
- இதற்கு Line of Actual Control (LAC) என்று பெயர்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள எல்லைக்கோடு – ராட்கிளிஃப் கோடு
- இதற்கு Line of Control (LOC) என்று பெயர்
பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையே உள்ள எல்லைக்கோடு – டுராண்ட் கோடு (Durand Line)
பிங்க் அலாரம்
- பெண்களின் பாதுகாப்பிற்காக மத்தியபிரதேசத்தில் பிங்க் அலாரம் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
தலித் உள் இட ஒதுக்கீடு
- இந்தியாவில் முதல் முறையாக ஹரியானா தலித் உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளது.
அம்பிகாபூர் விமான நிலையம்
- அம்பிகாபூர் விமான நிலையம் சத்திஸ்கர் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மருந்து ஒழுங்குமுறை ஆணைய மாநாடு
- 19வது சர்வதேச மருந்து ஒழுங்குமுறை ஆணைய மாநாடானது புதுதில்லியில் நடைபெற்றது.
- இம்மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
ஏவுகணை சோதனை மையம்
- ஆந்திரப்பிரதேசத்தின் நாகயாலானகாவில் புதிய ஏவுகணை சோதனை மையம் நிறுவப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
- 18வது வெளிநாடு வாழ் இந்தியர் தினம் ஒடிசாவில் நடைபெற உள்ளது.
- வெளிநாடு வாழ் இந்தியர் தினம் – ஜனவரி 9
IAF உலக விண்வெளி விருது
- 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் IAF உலக விண்வெளி விருதானது இஸ்ரோ தலைவர் சோம்நாத்-திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விழா இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்றுள்ளது.
- இவ்விருதானது சந்திராயன் 3 திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
மிஷன் பசுந்தரா
- அசாமிலுள்ள பூர்வ குடிமக்களுக்கு நில உரிமை வழங்க மிஷன் பசுந்தரா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிட்டிசன் சென்டினல் செயலி
- சாலைப்போக்குவரத்து விதியை மீறிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிட்டிசன் சென்டினல் செயலி கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாடு
- 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாடானது இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்திய உயிர் சக்தி வேளாண் மாநாடு
- இந்திய உயிர் சக்தி வேளாண் மாநாடானது பெங்களூரில் நடைபெறுகிறது.
புரோபா 3 திட்டம்
- யூரோப்பியன் விண்வெளி நிறுவனமும், இஸ்ரோவும் இணைந்து புரோபா 3 திட்டத்தினை செயல்படுத்தப்பட உள்ளன.
- இத்திட்டத்தின்படி செயற்கையான சூரிய கிரகணத்தை உருவாக்கி சூரியனிலுள்ள கொரனா பகுதியை ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
மலேரியா ஒழிப்பு
- எகிப்து நாடு மலேரியா நோயை ஒழித்துள்ளது.
- மலேரியா தினம் – ஏப்ரல் 25
- மலேரியா தடுப்பூசி – R-21 / Matrix – M
பொது வாக்கெடுப்பு
- ஐரோப்பிய யூனியனில் மால்டோவா என்ற நாடு இணைய பொது வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.
- தற்போது ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன.
பிரிக்ஸ் உச்சி மாநாடு
- 16வது பிரிக்ஸ் உச்சிமாநாடானது ரஷ்யாவில் நடைபெற்றது.
- கருப்பொருள்: உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்.
அதிபர்
- லுவாங் குவாங் வியட்நாம் நாட்டின் அதிபராகி உள்ளார்.
- பிரபோவா சுபியாண்டோ இந்தோனேசியாவின் அதிபராகி உள்ளார்.
டி20 உலகக்கோப்பை
- மகளிருக்கான டி20 உலகக்கோப்பையை நியூசிலாந்து வென்றுள்ளது.
முக்கிய தினம்
சர்வதேச பனிச்சிறுத்தை தினம் (International Show Leopard Day) – அக்டோபர் 23
மோல் தினம் (Mole Day) – அக்டோபர் 23
- 1 மோல் = 6.02 x 1023