Daily Current Affairs
Here we have updated 22nd & 23rd September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நீதிபதிகள் நியமனம்
உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சென்னை – கே.ஆர்ஸ்ரீராம்
- கேரளா – நிதின் மதுகர்
- இமாச்சலப்பிரதேசம் – ராஜீவ் ஷக்தேர்
- மத்தியப்பிரதேசம் – சுரேஷ் குமார்
- ஜார்க்கண்ட் – ராமச்சந்திர ராவ்
- ஜம்மு & காஷ்மீர், லடாக் – தாஷி ரப்ஸ்தான்
- டெல்லி – மன்மோகன்
- மேகாலயா – இந்திரா முகர்ஜி
அமர் ப்ரீத் சிங்
- விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக அமர் ப்ரீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி அர்ஜுன் சிங் ஆவார்.
- இந்திய விமானப்படை என்பது இந்திய ஆயுதப் படைகளின் வான்வெளி படை ஆகும்.
- இந்திய வான்வெளியைப் பாதுகாப்பதும், ஆயுத மோதலின் போது வான்வழிப் போரை நடத்துவதும் இதன் முதன்மை நோக்கம் ஆகும்.
- இது ஏர் சீப் மார்ஷல் (Air Chief Marshal) என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட விமானப்படை தளபதியால் வழிநடத்தப்படுகிறது.
- இது ஏழு படைப்பிரிவுகளைக் கொண்டது.
- அனில் செளத்ரி – பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி
- உபேந்திர திவேதி – இந்திய ராணுவ தலைவர்
- தினேஷ் திரிபாதி – இந்திய கடற்படையின் புதிய தலைமை தளபதி
- அஜீத் தேவால் – தேசிய பாதுகபாப்பு ஆலோசகர்
- தல்ஜித்சிங் செளத்ரி – எல்லைப் பாதுகாப்பு படை (BSF) தலைமை இயக்குநர்
QUAD உச்சி மாநாடு 2024
- 2024ஆம் ஆண்டிற்கான QUAD உச்சி மாநாடானது அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- QUAD உச்சி மாநாடு 2025 இந்தியாவில் நடைபெற உள்ளது.
- இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்றவை QUAD அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
FIDE 100 ஆண்டு விழா விருது
- FIDE 100 ஆண்டு விழா விருதுகளில் சிறந்த வீரருக்கான விருது மேக்னஸ் கார்ல்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த வீராங்கனைக்கான விருது ஜூடிட் போல்கருக்கு (ஹங்கேரி) வழங்கப்பட்டுள்ளது.
கேரளா
- மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு (FAASI) 2024-ல் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
- இரண்டாம் இடம் – தமிழ்நாடு
- மூன்றாம் இடம் – ஜம்மு & காஷ்மீர்
- FSSAI (Food Safety and Standards Authority of India) – 2008
- தலைமையகம் – புதுதில்லி
விதி ரத்து
- அண்மையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2023ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
- அரசியலமைப்பின் விதிகளான 14, 19, 19(1) (g) மீறியதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிஷி மர்லோனா
- இந்தியாவின் 17வது பெண் முதல்வராக அதிஷி மர்லோனா பதவியேற்றுள்ளார்.டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்
- இந்தியாவின் முதல் பெண் முதல்வர் – சுச்சித கிருபாளினி
- மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் – விஜயலட்சுமி பண்டிட்.
- மத்திய வெளியுறவு அமைச்சர் – சுஷ்மா ஸ்வராஜ்
- மாநிலத்தின் இளம் வயது அமைச்சர் – சுஷ்மா ஸ்வராஜ் (25 வயது)
- சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் – சரோஜினி நாயுடு
- ஐக்கிய நாடுகளின் பொது சபையில் முதல் பெண் தலைவர் – விஜயலட்சுமி பண்டிட் (1953).
- இந்தியாவில் முதல் பெண் பிரதமர் – இந்திராகாந்தி (1966).
- முதல் பெண் காவல்துறை உயர் அதிகாரி – கிரண்பேடி (1972).
- அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் – அன்னைதெரசா (1979).
- எவரெஸ்டை சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் – பச்சேந்திரி பால் (1984).
- புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண் – அருந்ததி ராய் (1997).
- முதல் பெண் குடியரசுத் தலைவர் – பிரதிபா பாடீல் (2007).
- மக்களவையின் பெண் சபாநாயகர் – மீராகுமார் (2009).
- உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி – மீராசாகீப் பாத்திமா பிவீ
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் – அன்னிபெசன்ட்
- முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) – காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா
- இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் – திருமதி. நிர்மலா சீத்தாராமன்
- இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் – நிர்மலா சீத்தாராமன்
எஸ்றா சற்குணம்
- இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இசிஐ பேராயருமான எஸ்றா சற்குணம் காலமானார்.
அநுர குமார திசாநாயக்க
- இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
- ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதன் முறையாக ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
முக்கிய தினம்
உலக சைகை மொழி தினம் (International Day of Sign Languages) – செப்டம்பர் 23
- கருப்பொருள்: “Sign up for Sign Language Rights”
உலக காண்டாமிருக தினம் (World Rhino Day) – செப்டம்பர் 22
உலக நதிகள் தினம் (World Rivers Day) – செப்டம்பர் 22
- கருப்பொருள்: “Waterways of Life”
ரோஜா தினம் (Rose Day) – செப்டம்பர் 22