Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th to 26th July

Daily Current Affairs

Here we have updated 24th to 26th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பொற்பனைக்கோட்டை

  • புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற 2ஆம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புவிசார் குறியீடு

  • இந்தியாவில் புவிசார் குறியீட்டில் தமிழ்நாடு 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஜோ.அருண்

Vetri Study Center Current Affairs - Jo.Arun

  • தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக அருட்தந்தை ஜோ.அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிதிப்பற்றாக்குறை

  • நடப்பு நிதியாண்டில் நிதிபற்றாக்குறை நாட்டின் ஜிடிபியில் (GDP) 4.9% ஆக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

  • ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்கிறோம்.

GDP = C + I + G + (X – M)

C – நுகர்வோர் I – முதலீட்டாளர்
G – அரசு செலவுகள் (X-M) ஏற்றுமதி – இறக்குமதி.

  • 1934ஆம் ஆண்டில் சைமன் குஸ்நட் என்பவரால் GDPயின் நவீன கருத்து முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

கிழக்காசிய உச்சி மாநாடு

  • கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஆறாவது கிழக்காசிய உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்றது.

முத்ரா திட்டம்

  • முத்ரா திட்டதின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முத்ரா திட்டம் – 08.04.2015

முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் தொகை

  • ஷிஷு (Shishu) – 50,000 வரை கடன்
  • கிஷோர் (Kishore) – 50,000 முதல் 5,00,000 வரை கடன்
  • தருண் (Tarun) – 5,00,000 முதல் 10,00,000 வரை கடன்

ஏஞ்சல் வரி

  • இந்தியாவில் 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஏஞ்சல் வரி நீக்கப்பட்டுள்ளது.
  • ஏஞ்சல் வரி புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு விதிக்கப்படும் வரியாகும்.
  • 2012-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பீகார்

  • சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்காக பீகாரிலுள்ள விஷ்ணுபத் கோவில் மற்றும் மகோபாதி கோவில் தரம் உயர்த்தப்பட உள்ளது.

வாத்சல்யா

  • 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்காக வாத்சல்யா (Vatsalya) என்னும் ஓய்வூதிய திட்டமானது மத்திய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்

  • உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியாவிற்கு 82வது இடம் கிடைத்துள்ளது.
  • முதலிடம் – சிங்கப்பூர்

பூடான்

  • நடப்பாண்டில் இந்தியாவிடமிருந்து அதிகபட்ச நிதியுதவி பெறும் நாடாக திகழ்கிறது.

Interaction-24

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் கூட்டு ராணுவப் பயிற்சியானது இன்டராக்சன்-24 (Interaction-24) எனும் பெயரில் நடைபெற்றுள்ளது.
  • SCO – Shanghai Cooperation Organisation – 15.6.2001

புதன் கோள்

Vetri Study Center Current Affairs - Mercury

  • பூமிக்கு அருகில் உள்ள புதன் கோளில் அதிக அளவில் வைரம் இருப்பதாக சீனா, பெல்ஜியம் அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

இந்திய தேசியக் கொடியை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் ஷரத் கமல் ஏற்ற உள்ளனர்

  • இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் இளைய வீரர் தினிதி தேசிங்கு – 14 வயது (நீச்சல் பிரிவு)
  • மூத்த வீரர் ரோகன் போபண்ணா – 44 வயது (டென்னிஸ் பிரிவு)

சிறந்த கால்பந்து வீராங்கனை விருது

Vetri Study Center Current Affairs - Indhumathi

  • அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இந்திய அளவில் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதினை இந்துமதிக்கு அளித்துள்ளது.

முக்கிய தினம்

கார்கில் வெற்றி தினம் (Kargil Vijay Diwas) – ஜூலை 26

உலக கருவியலாளர் தினம் (World Embryologist Day) – ஜூலை 25

உலக நீரில் மூழ்கும் தடுப்பு நாள் (World Drowning Prevention Day) – ஜூலை 25

சர்வதேச சுய பாதுகாப்பு தினம் (International Self-Card Day) – ஜூலை 24

 

Related Links

Leave a Comment