Daily Current Affairs
Here we have updated 2nd to 4th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தங்க நகை தொழிற்பூங்கா
- தமிழகத்தில் தங்க நகை தொழிற்பூங்கா கோயம்புத்தூரில் அமைய உள்ளது.
பட்டறை கருவாடு
- ராமநாதபுரத்தின் புகழ் பெற்ற பட்டறை கருவாட்டிற்கு புவிசார் குறியீடு பெறப்பட உள்ளது.
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
- புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
- 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க தொடங்கப்பட்ட திட்டமே புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ஆகும்.
- புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – 2022
சிறப்பு ரேஷன் கார்டு
- மிசோரம் மாநில அரசு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சிறப்பு ரேஷன் அட்டைகளை அறிமுகம் செய்துள்ளது.
- இந்த ரேஷன் அட்டை சிவப்பு நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில மறு சீரமைப்பு சட்டம்
- மாநில மறு சீரமைப்பு சட்டம் 1956ன் படி மதராஸ் மாகாணத்தில் இருந்து மொழிவாரியாக ஆந்திரம், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்கள் நவம்பர் 1-ல் பிரிக்கப்பட்ட்டது.
- 1966 நவம்பர் 1-ல் பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
- 2000 நவம்பர் 1-ல் மத்தியப்பிரதேசத்திலிருந்து சத்திஸ்கர் பிரிக்கப்பட்டது.
தீபம் 2.0 திட்டம்
- ஆந்திராவில் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க தீபம் 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா – 01.05.2016
- ஏழை மக்களுக்கு சிலிண்டர் வழங்க தொடங்கப்பட்ட திட்டம்
குடியரசு தினம்
- 2025 குடியரசு தினத்திற்கான சிறப்பு விருந்தினாராக இந்தோனேசியா பிரதமர் பிரபோவோ சுபியாண்டோ (Prabowo Subianto) கலந்து கொள்ள உள்ளார்.
சைபர் அச்சுறுத்தல்
- கனடா நாடானது இந்தியாவை சைபர் அச்சுறுத்தல் பட்டியிலில் இணைத்துள்ளது.
ராஜேஷ் குமார் சிங்
- பாதுகாப்பு செயலாளராக ராஜேஷ் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆராய்ச்சி மையம்
- லடாக்கின் லே பகுதியில் வேற்று கிரக ஆராய்ச்சி மையத்தினை (Analog Space Mission) இஸ்ரோ தொடங்கியுள்ளது.
வந்திதா பாண்டே
- கேந்திரிய க்ரிக் மந்திரி தக்ஷிதா பதக் 2024 விருதானது புதுக்கோட்டையின் வந்திதா பாண்டே விசாரணை பிரிவிற்காக பெற்றுள்ளார்.
GST வசூல்
- அக்டோபர் மாதத்தில் 1.87 லட்சம் கோடி GST வசூல் செய்யப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 2024-ல் அதிகபட்சமாக 2.10 லட்சம் கோடி GST வசூலாகியுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி
- இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2070 ஆம் ஆண்டுக்குள் 24.7% இழக்க உள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.
- உயரும் கடல் மட்டம், காலநிலை மாற்றம், தொழிலாளர் உற்பத்தி திறன் குறைவு ஆகியவற்றால் இந்த இழப்பு ஏற்பட உள்ளது.
வஜ்ர பிரஹார் இராணுவ பயிற்சி
- அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே 15வது வஜ்ர பிரஹார் கூட்டு இராணுவ பயிற்சி அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
கருட சக்தி இராணுவ பயிற்சி
- இந்தோனேசியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே கருட சக்தி கூட்டு இராணுவ பயிற்சி இந்தோனேசியாவில் நடைபெற்று உள்ளது.
தொடர்புடயை செய்திகள்
- சிம்பெக்ஸ் – சிங்கப்பூர் & இந்தியா இடையேயான கூட்டு இராணுவ பயிற்சி
- யூத் அபியாஸ் – இந்தியா & அமெரிக்கா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சி
ஹ்வாசாங்-19
- வடகொரியா நாடானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹ்வாசாங்-19 என்னும் புதிய எவுகணையை சோதித்துள்ளது.
முக்கிய தினம்
உலக ஜெல்லி மீன் தினம் (World Jelly Fish Day) – நவம்பர் 3
சர்வதேச உயிர்க்கோள காப்பக தினம் (International Biosphere Reserves Day) – நவம்பர் 3