Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th & 5th August 2024

Daily Current Affairs

Here we have updated 4th & 5th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

யானைகள் எண்ணிக்கை

Vetri Study Center Current Affairs - Elephant Death

  • தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையானது 3063ஆக உயர்ந்துள்ளது.
  • 2023-ல் தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2961ஆக இருந்தது.
  • சத்தியமங்கலத்தில் யானைகள் எண்ணிக்கை  (Population) அதிகமாக உள்ளது.
  • நீலகிரியில் யானைகள் அடத்தியாக ((Population Density) உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • உலக யானைகள் தினம் – Aug 12
  • இந்தியாவின் பாரம்பரிய விலங்கு – யானை (2010)
  • யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டையை குறைக்கும் திட்டம் – “திட்டம் கஜா கோதா (Project Gajah Kotha)” – அசாம்
  • கஞ்உத்சவ் (யானைகள் திருவிழா) – அசாம்
  • யானைகள் அதிகமாக இரயில் அடிப்பட்டு இறக்கும் மாநிலம் – அசாம்
  • யானைகள் அதிகம் உள்ள மாநிலம் – கர்நாடகா

நூல் வெளியீடு

  • ப.திருமாவேலன் எழுதிய கலைஞரின் பெரியார் நாடு என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இயல் விருது 2024

  • எழுத்தாளர் ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2024 வழங்கப்பட உள்ளது.

சிறந்த செயல்திறன் விருது 2023

  • உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறந்த செயல்திறன் விருது 2023 தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

யானைகள் வழித்தடம்

  • தமிழகத்திலுள்ள யானை வழித்தடங்களை 42ஆக உயர்த்த நாகநாதன் கமிட்டி தமிழக அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.
  • தமிழகத்தில் தற்போது 20 யானை வழித்தடங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா – 150 யானை வழித்தடங்கள்
  • யானை வழித்தடங்கள் அதிகமாக உள்ள மாநிலம் – மேற்கு வங்காளம் (26 வழித்தடங்கள்)
  • கஜ்ராஜ் அமைப்பு – இரயில் தண்டவாளங்களை யானைகளை கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்பை தடுக்க உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அமைப்பு

உலக கைவினை நகரச் சான்று

  • உலக கைவினைக் கழகத்தின் உலக கைவினைச் நகரச் சான்றானது ஸ்ரீநகர் நகரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் ஆலை

  • இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை அசாமின் மேரிகான் (Morigaon) பகுதியில் அமைய உள்ளது.

யாமினி கிருஷ்ணன்

  • ஆந்திரபிரதேசத்தினை சேர்ந்த பரதநாட்டியம், கதகளி போன்றவற்றில் சிறந்த நடனக்கலைஞர் யாமினி கிருஷ்ண மூர்த்தி காலமானர்.
  • 2016-ல் பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக தெற்கு உச்சி மாநாடு

  • 3வது உலக தெற்கு உச்சி மாநாட்டினை இந்தியா நடத்தியுள்ளது.

தல்ஜித் சிங் சௌத்ரி

Vetri Study Center Current Affairs - Daljeet Chaudhary

  • எல்லை பாதுகாப்புப் படை (BSF) தலைமை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • BSF – Border Security Force
  • அமைதி காலங்களில் இந்திய நில எல்லைப் பகுதிகளைக் காப்பது மற்றும் நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

தரவரிசை

  • பால், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
  • உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை, தேயிலை உற்பத்தியில் இந்தியா 2ஆம் இடம் வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

  • ட்ரோன் சகோதரி – வேளாண் நடைமுறைகளை ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க பெண்களுக்கு பயிற்சி அளித்தல்.
  • ஸ்ரீ அன்னம் –  சிறுதானியங்கள் வழங்கும் திட்டம்

மருத்துவர்கள் எண்ணிக்கை

  • இந்தியாவில் 836 பேர்களுக்கு ஒரு மருத்துவர் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
  • 1000 பேர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற உலக சுகாதார அமைப்பு தர அளவினை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது.

பிட்ச் பிளாக்

  • இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்கும் விமானப்படை பயிற்சியான பிட்ச் பிளாக் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது.

ரஷ்ய கடற்பறை அணிவகுப்பு

  • தபார் என்னும் இந்திய கப்பல் ரஷ்ய கடற்படை அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளது.

சீன முதலீடு

  • இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகள் பட்டியிலில் சீனா 22வது இடத்தில் உள்ளது.

கூடுதல் தகவல்கள்

  • இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சிங்கப்பூர், லக்சம்பர்க் நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

நோவோ ஜோகோவிச்

Vetri Study Center Current Affairs - Novak Djokovic

  • பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தங்கம் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

  • நண்பர்கள் தினம் (Friendship Day) – ஆகஸ்ட் 04

Related Links

Leave a Comment