Daily Current Affairs
Here we have updated 6th & 7th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது
- கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதானது சுசிலா, மு.மேத்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
குழந்தை இறப்பு விகிதம்
- தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 8 என்ற விகித்தில் உள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதம்
- தமிழ்நாட்டின் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 40.2 ஆகும்.
பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம்
- பஞ்சாரா விராசத் அருங்காட்சியகமானது மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்டது.
புதுதில்லி
- கடல்சார் டிகார்பனைசேஷன் மாநாடானது (Maritime Decarbonisation Conference) புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.
மலபார் பயிற்சி 2024
- இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் கடற்படை பயிற்சியான மலபார் பயிற்சி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
- இப்பயிற்சியானது 1992 இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே துவங்கப்பட்டது. பின்னர் ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் இணைந்து கொண்டனர்.
காசிந்த் இராணுவப் பயிற்சி (KAZIND)
- இந்தியாவிற்கும் கஜகஸ்தானிற்கும் இடையே காசிந்த் இராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
முதல் ஹைட்ரஜன் ரயில்
- இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் நாடுகள்
- ஜெர்மெனி
- பிரான்ஸ்
- ஸ்வீடன்
- சீனா
SCO கூட்டம் – 2024
- 2024-ஆம் ஆண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
- SCO (Shanghai Cooperation Organisation) – 15.6.2001
DRDO
- நான்காம் தலைமுறை மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பினை DRDO உருவாக்கியுள்ளது.
- DRDO (Defence Research and Development Organisation) – 1958
ஃபட்டா ஏவுகணை
- ஒலியை விட 15 மடங்கு வேகமாக செல்லும் ஃபட்டா ஏவுகணையை ஈரான் சோதித்துள்ளது.
இரானி கோப்பை 2024
- 2024 ஆம் ஆண்டிற்காக இரானி கிரிக்கெட் கோப்பையை மும்பை அணி வென்றுள்ளது.
முக்கிய தினம்
உலக பருத்தி தினம் (World Cotton Day) – அக்டோபர் 7
- கருப்பொருள்: “Cotton for Good”
உலக வாழ்விட தினம் (World Habitat Day) – அக்டோபர் 7
- ஆண்டுதோறும் அக்டோபர் மாத முதல் திங்கள் அன்று கொண்டாடப்படுகிறது.
நீலகிரி வரையாடு தினம் – அக்டோபர் 7