Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th to 9th December 2024

Daily Current Affairs

Here we have updated 7th to 9th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

காலநிலை விளக்க பூங்கா

  • கலைஞர் நூற்றாண்டு காலநிலை விளக்க பூங்காவானது கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

நுரையீரல் புற்றுநோய்

Vetri Study Center Current Affairs - Lung Cancer

  • தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் நுரையீரல் புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது.
  • சென்னைக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரியில் நுரையீரல் புற்றுநோய் அதிகமாக உள்ளது.

சிசேரியன் பிரசவம்

  • நாட்டில் 5-ல் ஒரு குழந்தை சிசேரியன் மூலம் பிறக்கிறது.
  • இப்பட்டியிலில் தெலுங்கானா முதலிடமும், தமிழகம் இரண்டாமிடமும் பிடித்துள்ளது.
  • இப்பட்டியிலில் கடைசி இடத்தினை நாகலாந்து (குறைவான சிசேரியன்) பிடித்துள்ளது.

பாலின விகிதம்

  • இந்தியாவில் 2023-24-ஆம் ஆண்டிற்கான பாலின விகிதம்  930ஆக உள்ளது.
  • பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் நிலையை குறிப்பதாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • பாலின விகிதம் 2014-15 : 918

அலுவல் மொழி விழா

  • தெற்கு ரயில்வே தலைமையகத்தில் அலுவல் மொழி விழா (ராஜ் பாஷா உத்சவ்) கொண்டாடப்பட்டது.

நிலச்சரிவு

  • உத்திரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவைக் கட்டுப்படுத்த ராக்போல்ட்  தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழகத்தில் நிலச்சரிவைக் கட்டுப்படுத்த சாயில் நெய்லிங் மற்றும் ஹைட்ரோ சீலிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஐஎன்எஸ் துஷில்

  • இந்தியாவின் கடற்படையில் சேரவுள்ள ஐஎன்எஸ் துஷில் (INS Tushil) கப்பல் ரஷ்யா உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.
  • இதன் நீளம்: 125மீ
  • எடை: 3900 டன்
  • வேகம்: 30 கடல் மைல்/மணி

பிருஹத்ரயீ ரத்னா விருது

  • ஆயுர்வேத மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றிதற்காக வழங்கப்படும் பிருஹத்ரயீ ரத்னா விருது 2024 M.R.வாசுதேவனுக்கு வழங்கப்பட உள்ளது.

கடன் உச்ச வரம்பு

  • விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிணையில்லா கடன் உச்சவரம்பு ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம்

  • உத்திரப்பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
  • அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் 1968-ல் கொண்டு வரப்பட்டது.

AI பொறியாளர்

Vetri Study Center Current Affairs - Devin AI

  • உலகின் முதல் AI பொறியாளரான டெவின் (Devin) AI பொறியாளரை காக்னிசம் என்ற AI அமைப்பு உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் AI ஆசிரியர் – ஐரிஸ்
  • உலக சுகாதார நிறுவனத்தால் உருவாக்கபட்ட AI – சாரா
  • டிடி கிஸான் சேனல் AI Anchor – கிரிஸ், பொம்மி

MuleHunter AI

  • பொருளாதார மோசடிகளை தடுக்க MuleHunter AI-யை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

ப.முரளி அர்த்தநாரி

  • இந்திய களை அறிவியல் சங்கத்தின் ஆய்வு உறுப்பினராக ப.முரளி அர்த்தநாரி தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.

விமானச் சட்ட்டம் 1934

  • விமானச் சட்டம் 1934-ற்கு பதிலாக பாரதிய வாயுயான் விதேயக் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கல ஆய்வுத்திட்டம்

  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோட்ட முயற்சியான ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கல ஆய்வுத்திட்டமானது டிசம்பர் மாத இறுதியில் செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திராகாந்தி அமைதி பரிசு 2024

Vetri Study Center Current Affairs - Michelle Bachelet

  • சிலி நாட்டின் முன்னாள் பிரதமரான மிஷேல் பேச்லெட் என்பவருக்கு இந்திராகாந்தி அமைதி பரிசு 2024 வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திராகாந்தி அமைதி பரிசு 2023 – அலி அபு அவ்வாட், டேனியல் பாரன்போயிம்

மகாத்மா காந்தி நினைவு தினம்

  • அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணமானது டிசம்பர் 6-ஐ மகாத்மா காந்தி நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • அந்த மாகாணத்தில் காந்தி சிலை நிறுவப்பட்டதன் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச தியான தினம்

  • டிசம்பர் 21-யை சர்வதேச தியான தினமாக கொண்டாடப்பட வேண்டுமென்ற இந்தியாவின் முன்மொழிவை ஐ.நா. ஏற்றுக் கொண்டது.

ஷம்மி சில்வா

  • ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

ஆயுதப்படை கொடிநாள் (Armed Forces Flag Day) டிசம்பர் – 7

  • முப்படைகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ல் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச விமான போக்குவரத்து தினம் (International Civil Aviation Day) டிசம்பர் – 7

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day) டிசம்பர் – 9

 

Related Links

1 thought on “Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th to 9th December 2024”

Leave a Comment