Daily Current Affairs
Here we have updated 8th and 9th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
எஸ்.நாகராஜன்
- தமிழகத்தின் கருவூலம்-கணக்குத்துறை ஆணையராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இணைய பாதுகாப்பு கொள்கை
- இணைய பாதுகாப்பு கொள்கை 2.0ஐ தமிழ்நாடு அறிமுகம் செய்துள்ளது.
- 2020 ஆண்டு இணைய பாதுகாப்பு கொள்கையை தமிழ்நாடு அறிமுகம் செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- காற்றாலை மின் திட்டங்கள்-2024க்கான மறுசீரமைப்பு, புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்புக் கொள்கையை தமிழ்நாடு தொடங்கியுள்ளது.
உத்திரப்பிரதேசம்
- உத்திரப்பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் என்னும் பகுதியில் உலகின் முதல் ஆசிய மன்னர் கழுகுக்கான இனப்பெருக்க மையம் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினம் – செப்டம்பர் 7
- தமிழ்நாட்டில் 320 கழுகுகள் உள்ளன.
ஜிம் கார்பெட் தேசிய பூங்கா
- இந்தியாவிலுள்ள 55 புலிகள் சரணாலயத்தில் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் தான் அதிக புலிகள் உள்ளன.
- இப்பூங்காவில் 250 புலிகள் உள்ளன.
- இப்பூங்காவானது உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.
செல்வாக்கு மிக்கவர்கள்
- டைம்ஸின் செயற்கை நுண்ணறிவு துறையில் 100 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியிலில் இந்தியர்களான அஸ்வினி வைஷ்ணவ், அனில் கபூர், நந்தன் நிலேகனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
போபா ரிசர்வ் வனப்பகுதி
- அசாமின் வடகிழக்கு பகுதியிலுள்ள மழைக்காடுகளான போபா ரிசர்வ் வனப்பகுதி வனவிலங்கு சரணாலயமாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசநோய் ஒழிப்பு
- 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
- உலகளவில் 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலக காசநோய் தினம் – மார்ச் 24
சிலிக்கான் கார்பைடு ஆலை
- இந்தியாவின் முதல் சிலிக்கான் கார்பைடு ஆலை ஒடிசாவில் உருவாக்கப்பட உள்ளது.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி
- 2024-ம் நிதியாண்டுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) தெலுங்கானா முதலிடம் பிடித்துள்ளது.
- 1வது இடம் – தெலுங்கானா – 9.2%
- 2வது இடம் – தமிழ்நாடு – 8.2%
- 3வது இடம் – ராஜஸ்தான் – 8%
துஹின் காந்தா பாண்டே
- இந்தியாவின் புதிய நிதி செயலாளராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மனோஜ் துவிவேதி
- குடிமை பணி நன்னடத்தை விதி 1954 விதி 12 ன் கீழ் பயிற்சி IAS அதிகாரியான பூஜா கேத்கர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
- இது குறித்த விசாரனைக்கு மனோஜ் துவிவேதி தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நெகிழி மாசு
- இந்தியா உலகில் நெகிழி மாசு அதிகம் (9.3 டன்) உள்ள நாடாக திகழ்கிறது.
- 2வது இடம் – நைஜீரியா
- 3வது இடம் – இந்தோனேசியா
- 4வது இடம் – சீனா
அக்னி 4 ஏவுகணை
- ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது.
உலக தெற்கு நாடுகளின் உச்சி மாநாடு
- இந்தியா சமூகத்தில் 3வது உலக தெற்கு நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தியுள்ளது.
காற்று மாசுபாடு
- இந்தியாவில் காற்று மாசுபாட்டால் நாளொன்றுக்கு 464 குழந்தைகள் இறக்கின்றன.
- உலக அளவில் நாளொன்றுக்கு 2000 குழந்தைகள் இறக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
- காற்று மாசுபாட்டில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது
ஸ்டார்லைனர் விண்கலம்
- சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு திருப்பி அழைக்க சென்ற ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சனிக்கிழமை பூமிக்கு திரும்பியது.
துண்டிக்கும் உரிமை சட்டம்
- சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் துண்டிக்கும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அணுகடிகாரம்
- அமெரிக்கா நாடானது உலகின் முதல் அணு கடிகாரத்தை உருவாக்கியுள்ளது.
அருண்கோயல்
- குரோஷியாவிற்கான இந்தியா தூதராக அருண்கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரந்தீர் சிங்
- ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக ரந்தீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தியாவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள முதல் தலைவர்.
பாராலிம்பிக்
- பாராலிம்பிக் போட்டி உயரம் தாண்டுதலில் பிரவின் குமார் தங்கம் வென்றுள்ளார்.
- பாராலிம்பிக் போட்டி ஈட்டி எறிதலில் நவ்தீப் சிங் தங்கம் வென்றுள்ளார்.
- பாரிஸ் பாராலிம்பிக் நிறைவு விழாவில் ஹர்விந்தர் சிங் மற்றும் ப்ரீத்தி பால் தேசியக் கொடியேந்தினர்.
தொடர்புடைய செய்திகள்
- ஹர்விந்தர் சிங் – வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்.
- ப்ரீத்தி பால் – ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கம் வென்றார்.
முக்கிய தினம்
- இமாலய திவாஸ் (Himalaya Diwas) – செப்டம்பர் 09