Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th to 20th April 2024

Daily Current Affairs – April 2024

Here we have updated 18th to 20th April 2024 current affairs notes. These notes will be helpful for those who are preparing for competitive exams like TNPSC, TRB, and Police Exams.

Vetri Study Center Current Affairs 18-20th Feb 2024

குள்ளமான பெண் – கின்னஸ் சாதனை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி ஆம்ஜி என்ற பெண் உலகில் குள்ளமான பெண் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
62.8 செ.மீ உயரமுள்ளவராக திகழ்கிறார்.
பிரிமார்டையல் டுவார்ப்பிஸம் என்னும் அரிய மரபணுவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பசுமை கடன் திட்டம்

மத்திய பிரதேசம் மாநிலமானது பசுமை கடன் திட்டத்தில் முன்னிலை வகிக்கிறது.

கூடுதல் தகவல்கள் (மத்திய பிரதேசம்)

  • பள்ளிக்குழந்தைகளின் மன அழுத்த்தை குறைக்க மத்திய பிரதேசம் பை இல்லாத பள்ளிகள் கொள்கையினை கொண்டு வந்துள்ளது.

தினேஷ் திரிபாதி

இந்திய கடற்படையின் புதிய தலைமை தளபதியாக தினேஷ் திரிபாதி
நியமிக்கபட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் ஹைபிரிட் பிட்ச் கிரிக்கெட் மைதானம் (Hybrid Cricket Stadium) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் ஹைபிரிட் பிட்ச் கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

முகமது சலீம்

2024-ம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருது முகமது சலீம்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்

2022-ஆம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கை புகைப்படத்திற்கான விருதினை செந்தில் குமரன் வென்றிருந்தார். மேலும் இவ்விருதினை பெறும் முதல் தென்னிந்தியர் என்ற பெருமையையும் படைத்திருந்தார்.

க்ரூஸ் ஏவுகணை

நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையான க்ரூஸ் ஏவுகணை சந்திப்பூர் ஒருங்கிணை சோதனை மையத்தில்  (ஒடிசா) சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை பெங்களூரில் உள்ள DRDO ஆய்வகம் தயாரித்துள்ளது.

DRDO – Defence Research and Development Organisation

புவிசார் குறியீடு

தற்போது உத்திர பிரதேச மாநிலத்தின் 13 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  75 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி புவிசார் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ளது.

சுகன்யான் திட்டம்

இஸ்ரோவால் சுகன்யான் திட்டமானது 2025-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்

  • 15.08.1969-ல் உருவாக்கப்பட்ட இஸ்ரோவின் தலைமையகம் பெங்களூரில் அமைந்துள்ளது.
  • இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை – விக்ரம் சாராபாய்
  • 2008 – சந்திராயன் I திட்டம்
  • 2019 – சந்திராயன் II திட்டம்
  • 23.08.2023 – சந்திராயன் III திட்டம்

கேரளா

DRDO-வால் SPACE அமைப்பானது கேரளாவில் தொடங்கியுள்ளது.

ராஜீவ் கெளபா

ராஜீவ் கெளபா என்பவர் LGBTQ சமூகத்தின் பிரச்சனைகளை ஆராய்வதற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது 2024

அமிதாப் பச்சன்-க்கு 2024-ஆம் ஆண்டிற்கான லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஷேக் அகமது அப்துல்லா

குவைத் நாட்டின் புதிய பிரதமராக ஷேக் அகமது அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • ஏப்ரல் 18: உலக பாரம்பரிய தினம்.
  • ஏப்ரல் 19: உலக கல்லீரல் தினம்.
  • ஏப்ரல் 20: உலக சர்க்கஸ் தினம்.
  • ஏப்ரல் 21: ஒருங்கிணைந்த தேசிய சீன மொழி தினம்.

Related Links

Leave a Comment