Daily Current Affairs – March 2024
Here we have updated 19th to 22nd March 2024 current affairs notes. These notes will be helpful for those who are preparing for competitive exams like TNPSC, TRB, and Police Exams.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் திட்டம் 414
இந்தியத் தேர்தல் ஆணையம் (EC) ஆனது இமாச்சலப் பிரதேசத்தில் “திட்டம் 414” என்ற சிறப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த திட்டம் கடந்த மக்களவைத் தேர்தலில் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவான 414 வாக்குச் சாவடிகளில் அதிகபட்ச வாக்குப் பதிவினை பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
சரஸ்வதி சம்மான் விருது
கேரளத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான பிரபா வர்மாவுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இயற்றிய ‘ ரெளத்ர சாத்விகம் என்ற கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருதை வழங்கும் கே.கே.பிர்லா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு
வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை இசை அகாடமி விருதுகள் 2024
- சங்கீத கலாநிதி விருது – தோடூர் மடபுசி கிருஷ்ணா
- சங்கீத கலா ஆச்சார்யா விருது – பரஸ்சலா ரவி (V. இரவீந்திரன் நாயர்) மற்றும் கீதா ராஜா
- TTV விருது – நரசிம்மன் மற்றும் S.வெங்கடேசன் மற்றும் H.K.நரசிம்மமூர்த்தி
- நிருத்ய கலாநிதி விருது – டாக்டர் நீனா பிரசாத்
இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 37% அதிகரிப்பு
இந்தியாவின் 69.2 கோடி பெண்களில் 37 சதவீதம் பேர் வேலைக்குச் சென்று பணம் ஈட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் 34 சதவீதத்துடன் முன்னணியிலும் புணே 33 சதவீதத்துடன், சென்னை 29 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதேசமயம், தில்லி-என்சிஆர் பகுதியில் முந்தைய 2022- ஆம் ஆண்டில் இருந்து 2 சதவீத குறைந்து
20 சதவீதமாக உள்ளது.
நோக்டிஸ் எரிமலை – செவ்வாய்க் கிரகம்
செவ்வாய்க் கிரகத்தில் ‘பிரம்மாண்டமான’ எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு
‘நோக்டிஸ் எரிமலை’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்த எரிமலை 29,600 அடி உயரமும் , சுமார் 450 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 126-வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்கள் முறையே டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து நாடுகள் பிடித்துள்ளன.
ஐ.நா. ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின் மகிழச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தனி நபர் வருவாய், சமூக ஆதரவு, சுகாதாரம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தலிபான்கள் நிர்வாகத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா
126-வது இடத்தில் உள்ளது.