Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd March 2024

Daily Current Affairs – March 2024

Here we have updated 23rd March 2024 current affairs notes. These notes will be helpful for those who are preparing for competitive exams like TNPSC, TRB, and Police Exams.

23rd March 2024 Current Affairs in Tamil by Vetri Study Center

இஸ்ரோவின் ‘புஷ்பக்’ விண்கல சோதனை வெற்றி

இந்தியாவின் முதல் மறு பயன்பாட்டு ஏவு வாகனமான (Reusable Launch Vehicle (RLV)), ‘புஷ்பக் (Pushpak)’ விண்கலத்தின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது இஸ்ரோ.

புஷ்பக் விண்கலம், விமானத்தை போல இறக்கைகள் உடையது. இது, 6.5 மீட்டர் நீளமும், 1.75 டன் எடையும் கொண்டது.

இதற்கு முன்னர் 2016 மற்றும் 2023-இல் நடந்த சோதனையை இது வெற்றிகரமாக முடித்தது குறிப்பிடத்தக்கது.

குறுங்கோளுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் பெயர்

செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் உள்ள சுற்று வட்டப் பாதையில் சுழன்றுகொண்டிருக்கிற குறுங்கோள் ‘2005 ஈஎக்ஸ்296’ (2005 EX296) -க்கு “(215884) ஜெயந்த்மூர்த்தி” என்று சர்வதேச வானியல் சங்கத்தினர் பெயர்சூட்டி உள்ளனர். இது சூரியனை சுற்றி வர 3 ஆண்டுகள் 3 மாதங்கள் எடுத்துகொள்கிறது.

பூட்டான் தாய்-சேய் நல மருத்துவமனை

பூட்டான் தலைநகரம் திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட அதிநவீன தாய்-சேய் நல மருத்துவமனையான ஜியால்ட்சுன் ஜெட்சன் பெமாவை (Gyaltsuen Jetsun Pema) பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார்.

தேசிய கட்சிகள்‌ எண்ணிக்கை

17 ஆண்டுகளுக்கு முன்பு 14 ஆக இருந்த தேசிய கட்சிகள்‌ எண்ணிக்கை 6 ஆக சரிவு. 1951 – 52ல்‌ நடைபெற்ற முதல்‌ மக்களவைத்‌ தேர்தலில்‌ 53 அரசியல்‌ கட்சிகள்‌ போட்டியிட்டன. இதில்‌ தேசிய அந்தஸ்து பெற்‌ கட்சிகள்‌ எண்ணிக்கை 14.

வரும்‌ மக்களவைத்‌ தேர்தலில்‌ போட்டியிடும்‌ கட்சிகளில்‌ பாஜக, காங்கீரஸ்‌, பகுஜன்‌ சமாஜ்‌ கட்சி, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌, தேசிய மக்கள்‌ கட்சி மற்றும்‌ ஆம்‌ ஆத்மி ஆகிய 6 கட்சிகள்‌ மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. தற்போது சுமார்‌ 2,500 அரசியல்‌ கட்சிகள்‌ இருப்பதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி:

இந்தியாவின்‌ தேர்தல்‌ பயணம்‌ தொடர்பாக, லீப்‌ ஆப்‌ பெயித்‌ (Leap of Faith) என்ற பெயரில் நூலை தேர்தல்‌ ஆணையம்‌ வெளியிட்டுள்ளது.

INS Kolkata

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட இந்திய கடற்படை கப்பல் INS Kolkata, 35 சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் இன்று மும்பை வந்தடைந்தது.

முக்கிய தினங்கள்

  • மார்ச் 22: உலகத்‌ தண்ணீர்‌ நாள்‌,
  • மார்ச் 23: பகத் சிங் தூக்கிலடப்பட்ட நாள்.

Related Links

2 thoughts on “Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd March 2024”

  1. Sir Please Share an April month onwards properly current affairs sir please response for students suggestions sir please sir

    Reply

Leave a Comment