Daily Current Affairs
Here we have updated 14th and 15th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கல்வி வளர்ச்சி நாள்
- காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
- காலம் – 15.07.1903 – 02.10.1975
நாணயம் வெளியீடு
- முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு (1924-2024) விழாவில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நிலையான வளர்ச்சி குறியீடு
- 2023-24 ஆண்டு வரையிலான நிலையான வளர்ச்சி குறியீட்டில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
- கேரளம், உத்திரகாண்ட் மாநிலங்கள் முதலிடம் பிடித்துள்ளது.
- கோவா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
- சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி போன்றவை யூனியன் பிரதேசங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
வறுமை ஒழிப்புத் திட்டம்
- வறுமை ஒழிப்புத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் இடம் பிடித்துள்ளது.
அரசியலமைப்பு படுகொலை தினம்
- முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975-ல் அவசரநிலை அறிவித்த நாளான ஜூன் 25–ம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை
- 2060 ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையானது 170 கோடியை தாண்டும் என ஐ.நா. அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
- இது சீனாவை போல இரு மடங்கு அதிகமாகும்.
மாதவிடாய் விடுமுறை
- மாதவிடாய் காலத்தில் முதன்முதலில் பெண்களுக்கு சிக்கிம் உயர்நீதிமன்றம் விடுமுறை அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மாதவிடாய் விடுமுறை முறை முதன் முதலில் ரஷ்யாவில் 1917-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவா
- வரும் நவம்பர் மாதத்தில் இந்தியாவின் முதல் உலக ஒலிப்பதிவு மற்றும் பொழுதுபோக்கு (WAVES) உச்சி மாநாடானது கோவாவில் நடைபெறவிருக்கிறது.
- WAVES – World Audio Visual and Entertainment Summit
பெயர் சூட்டல்
- அபுதாபியல் உள்ள சாலை ஒன்றுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஜார்ஜ் மேத்யூவின் பெயரை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி கெளரவித்துள்ளது.
புதிய பிரதமர்
- நேபாளத்தின் புதிய பிரதமராக சர்மா ஒலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
செஸ் ஒலிம்பியாட் போட்டி
- 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட் (Budapest) நகரில் நடைபெற உள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி – லண்டன்
- ஆண்கள் பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- மகளிர் பிரிவில் செக்குடியரசைச் சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகேவா (Barbora Krejcikova) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி – ஆஸ்திரேலியா
- இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் போட்டி – பிரெஞ்சு
- மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் போட்டி – லண்டன் (விம்பிள்டன்)
- நான்காவது கிராண்ட் ஸ்லாம் போட்டி – US
முக்கிய தினங்கள்
உலக சிம்பன்சி தினம் (Word Chimpanzee Day) – ஜூலை 14
சுறா விழிப்புணர்வு தினம் (Shark Awareness Day) – ஜூலை 14
சர்வதேச பைனிரி அல்லா மக்கள் தினம் (International Non-Binary People Day) – ஜூலை 14
உலக இளைஞர் திறன் தினம் (World Youth Skills Day) – ஜூலை 15
Related Links