Daily Current Affairs
Here we have updated 19th and 23rd July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அகழாய்வு கண்டெடுப்பு
- கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னூர் அகழாய்வில் தமிழ் எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும், இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த பானை ஓடுகளில் (ந்)தை, பாகஅந், ஊகூர், (சா)த்தன் என பொறிக்கப்பட்டுள்ளன.
- ஊகூர் என்பது ஊர் பெயராக கருதப்படுகிறது.
- உறையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊர் பெயர் உள்ளது.
- கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் ரெளலட்டட் வகை பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் 2கிராம், நீளம் 2.3 செ.மி. அகலம் 1.2 செ.மீ. அளவுள்ள 5 செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சூரியசக்தி மின் உற்பத்தி
- சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழ்நாடு 4வது இடத்தை பிடித்துள்ளது.
- 1வது இடம் – ராஜஸ்தான்
- 2வது இடம் – குஜராத்
- 3வது இடம் – கர்நாடகா
- ராஜஸ்தான் 22ஜிகா வாட் மின் உற்பத்தி செய்கிறது.
- தமிழ்நாடு 4ஜிகா வாட் மின் உற்பத்தி செய்கிறது.
- வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி போன்ற இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
சுய சான்றிதழ் திட்டம்
- புதிதாக வீடு கட்ட சான்றிதழ் வழங்க சுய சான்றிதழ் திட்டம் (Self Certification Scheme) தொடங்கப்பட்டுள்ளது.
- இதற்காக www.onlineeppa.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.
நிழல் அமைச்சரவை
- இந்தியாவில் முதன் முறையாக ஒடிசா மாநிலமானது இங்கிலாந்தில் உள்ளது போல நிழல் அமைச்சரவையை அறிமுகம் செய்துள்ளது.
உதவி எண்
- முதியோர்கள் நல உதவி எண் 14567 புதிதாக வெளியிடப்பட்டுள்ளது.
- 2050ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என UNFPA அமைப்பு அறிவித்துள்ளது.
- முதியவர்களின் எண்ணிக்கை 34.6 கோடியாக உயர உள்ளது.
நகரமயமாக்கல்
- 2050ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் நகரமயமாக்கல் 50%மாக மாறவுள்ளதாக UNFPA அமைப்பு அறிவித்துள்ளது.
ஜன் ஒளஷதி கேந்திரா
- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவின் முதல் வெளிநாட்டு ஜன் ஒளஷதி கேந்திராவை (மக்கள் மருந்தகம்) மொரிசீயஸ் நாட்டில் திறந்து வைத்துள்ளார்.
- மக்கள் மருந்தகம் – 2008
சண்டிபுரா வைரஸ்
- அண்மையில் குஜாரத்தில் குழந்தையொன்று சண்டிபுரா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழிந்துள்ளது.
- இந்த வைரஸ் பாதிப்பு 1965-ல் மகாராஷ்டிராவில் முதன் முதலாக பதிவாகியுள்ளது.
சுல்தான் இப்ராஹிம்
- மலேசியாவின் மன்னராக சுல்தான் இப்ராஹிம் பதவியேற்றுள்ளார்.
நியமனம்
- அமெரிக்காவிற்கான இந்திய தூதராக வினய் குவாத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு செயலர்
- கேரள மாநிலமானது வெளியுறவுச் செயலராக வாசுகி என்பவரை நியமித்துள்ளது.
ரந்தீர் சிங்
- ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
உலகப் பாரம்பரிய குழுக் கூட்டம்
- இந்தியாவில் ஜீலை 21-ல் தில்லியில் முதல் முறையாக உலகப் பாரம்பரிய குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருப்பொருள்
- 2024ஆம் ஆண்டிற்கான சுதந்திர தினத்திற்கான கருப்பொருளாக வளர்ந்த பாரதம் என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை
- நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5-7.5% வரை இருக்குமென பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
- 2024-25ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.8% வளர்ச்சியை எட்டும் என சர்வதேச செலாவாணி நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
- IMF – International Monetary Fund (27.12.1945)
உர்சுலா வான்டெர் லேயன் மேர்க்கல்
- ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உர்சுலா வான்டெர் லேயன் மேர்க்கல் (Ursula Von Der Leyen) நியமிக்கப்பட்டுள்ளார்.
மனோலோ மார்க்வெஸ்
- இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய தினம்
தேசிய ஒலிபரப்பு தினம் (National Broadcasting Day) – ஜூலை 23
தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளும் தினம் (National Flag Adoption Day) – ஜூலை 22
உலக மூளை தினம் (World Brain Day) – ஜூலை 22
- கருப்பொருள்: Brain health and prevention
விண்வெளி ஆய்வு தினம் (Space Exploration Day) – ஜூலை 20
சர்வதேச நிலவு தினம் (Space Exploration Day) – ஜூலை 20
சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) – ஜூலை 20