Daily Current Affairs
Here we have updated 7th and 8th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் திட்டம்
- அடிப்படை முதலுதவி பயிற்சி அளிக்க ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தினை இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தொடங்கியுள்ளது.
- இத்திட்டத்தின் மூலம் 42000 மருத்துவர்கள் மூலம் உயிர் காக்கும் சி.பி.ஆர். பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
சிவசங்கரி
- இலங்கை கம்பன் கழகம் வழங்கும் கம்பன் புகழ் விருதிற்கும், உயரிய இலக்கிய விருதான விஸ்வம்பரா சி.நாராயண ரெட்டி விருதிற்கும் எழுத்தாளர் சிவ சங்கரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பட்ஜெட் தாக்கல்
- ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
செளரிய சக்ரா விருது
- மேஜர் முஸ்தபா போஹ்ரா என்பவருக்கு செளரிய சக்ரா விருது (Shaurya Chakra Award)
வழங்கப்பட்டது.
கேரளா
- மூளையை உண்ணும் அமீபாவானா பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis) மூலம் கேரளா பாதிப்படைந்து வருகிறது
- இந்த அமீபா நீர் வழியாகவும், மூக்கு வழியாகவும் பரவுகிறது.
- முக்கிய அறிகுறிகள் : காய்ச்சல், தலைவலி, வாந்தி, பார்வை மங்குதல், வலிப்பு
முழு நேர உறுப்பினர்
- SCOஇல் 10வது முழு நேர உறுப்பினராக பெலாரஸ் இணைந்துள்ளது.
- 2025ஆம் ஆண்டிற்கான SCO தலைமை பொறுப்பினை சீனா ஏற்க உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- SCO (Shanghai Cooperation Organisation) – 15.06.2001
- தலைமையகம் – பெய்ஜிங், சீனா
அகதிகள் சட்டம் ரத்து
- பிரிட்டன் அரசு செயல்படுத்தி வந்த அகதிகள் சட்டத்தை பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ரத்து செய்துள்ளார்.
- இச்சட்டத்தினால் பிரிட்டனுக்கு உரிய ஆவணங்கள் இன்றி வரும் அகதிகளை ரூவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுகிறன்றன.
- இச்சட்டத்தினை பிரிட்டன் அரசு ரத்து செய்துள்ளது.
மசூத் பெஜேஷ்கியன்
- ஈரானின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் இறந்துள்ளார்.
மாநாடுகள் 2024
- G7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற உள்ளது.
- ரஷ்யாவின் கசான் (Kazan) நகரத்தில் பிரிக்ஸ் (BRICKS) மாநாடு நடைபெற உள்ளது.
- லாவோஸில் ஆசியான் (ASEAN) உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- பிரேசிலில் G20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- அஜர்பைஜானின் பாக்கோ (Baku) நகரில் COP29 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
The Psychology of War and Peace
- நீல் கிரிஷன் அகர்வால், ஏ.எஸ்.துலத், அசாத் துரானி ஆகியோர் The Psychology of War and Peace என்னும் புத்தகத்தினை எழுதியுள்ளனர்.
வினேஷ் போகாட்
- ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ மல்யுத்த போட்டியின் மகளிர் 50 கிலோ பிரிவில் வினேஷ் போகாட் தங்கம் வென்றுள்ளார்.
ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் போட்டி – மலேசியா
- ஆடவர் இரட்டையர் பிரிவில் அபய் சிங், வேலவன் செந்தில் குமார் இணை தங்கம் வென்றுள்ளது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் அபய் சிங், ஜோஷ்னா சின்னப்பா இணை தங்கம் வென்றுள்ளது.
முக்கிய தினங்கள்
உலகளாவிய மன்னிப்பு தினம் (Global Forgiveness Day) – ஜூலை 7
- கருப்பொருள்: Forgive
Kiswahili Language Day – ஜூலை 07
- கருப்பொருள்: Education and culture of peace
உலக சாக்லெட் தினம் (World Chocolate Day) – ஜூலை 07
Related Links