Daily Current Affairs
Here we have updated 16-17th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பால புரஸ்கார் சாகித்திய அகாதெமி விருது
- சிறார் எழுத்தாளர்களுக்காக வழங்கப்படும் பால புரஸ்கார் சாகித்திய அகாதெமி விருதானது யூமா வாசுகியின் தன்வியின் பிறந்த நாள் சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இவர் இயற்பெயர் – மாரிமுத்து
- 2017-ல் கசாக்கின் இதிகாசம் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தற்காக சாகித்திய அகாதமி விருதினை பெற்றுள்ளார்
யுவ புரஸ்கார் சாகித்திய அகாதெமி விருது
- 35வயதிற்குட்பட்ட எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் சாகித்திய அகாதெமி விருதானது லோகேஷ் ரகுராமனின் விஷ்ணு வந்தார் நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடும் போட்டி
- தமிழ்நாடு காவல்துறை சார்பில் முதன் முறையாக பெண்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியானது செங்கல்பட்டு, ஒத்திவாக்கம் தமிழ்நாடு கமாண்டோ பள்ளியில் நடைபெற்றது.
- 1973-ல் தொடங்கிய பெண் காவல்துறை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவினையொட்டி நடத்தப்பட்டது.
- தற்போது காவல்துறையில் 21% பெண்கள் பணிபுரிகின்றன.
தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் கருணாநிதி – மகளிர்க்கென தனி காவல் பிரிவு – 1973
- ஜெ. ஜெயலலிதா – மகளிர் தனி காவல் நிலையம் – 1992 (ஆயிரம் விளக்கு)
- தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி – லத்திகா சரண் (2009)
பீட்டர் பில்லெக்ரினி
- ஸ்லோவாக்கியா நாட்டின் புதிய அதிபராக பீட்டர் பில்லெக்ரினி பதவியேற்றுள்ளார்.
சிறில் ராமபோசா
- தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிறில் ராமபோசா பதவியேற்றுள்ளார்.
சர்வதேச மாநாடு
- உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
பிரிக்ஸ் நாட்டு விளையாட்டு போட்டி
- பாய்மன்டி பாய்சியா, மெளமி தத்தா, யாஷினி சிவங்கர் ஆகியோருடைய இந்தியாவின் மகளிர் டென்னிஸ் அணி பிரிக்ஸ் நாட்டு விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
ஆப்பிரிக்க குழந்தைகள் தினம் (Day of the African Child) – ஜீன் 16
- கருப்பொருள்: Education for all children in Africa: the time is now.
குடும்பத்திற்கு பணம் அனுப்பும் சர்வதேச தினம் (International day of family remittances) – ஜீன் 16
உலக கடல் ஆமை தினம் (World Sea Turtle Day) – ஜீன் 16
பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான உலக நாள் (World day to combat desertification and drought) – ஜீன் 17
- கருப்பொருள்: United for land. Our legacy. Our future.