Daily Current Affairs
Here we have updated 29-30th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மாநகராட்சி உருவாக்கம்
- தமிழ்நாட்டில் நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட நகராட்சிகள் புதிய மாநகராட்சிகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 21ஆக இருந்த மாநகராட்சிகள் தற்போது 25ஆக உயர்ந்துள்ளன.
- இந்த மாநகராட்சிகள் ஊரக நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 கீழ் உருவாக்கப்பட்டது.
சட்டத்திருத்தம்
- தமிழ்நாடு மாநில பட்டியல் மற்றும் பழங்குடியினர் தலைவரின் பதவிக்கால திருத்த மசோதாவானது தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- தற்போது தமிழ்நாடு பட்டியல் மற்றும் பழங்குடியினர் தலைவரின் பதவிக்காலம் – 3 ஆண்டுகள் அல்லது 75 வயது
- தமிழ்நாடு பட்டியல் மற்றும் பழங்குடியினர் சட்டம் 2021ன் படி தமிழ்நாடு பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம் (2021) உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் – 338
- தேசிய பழங்குடியினர் ஆணையம் – 338A
மதுவிலக்கு சட்ட மசோதா
- தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட மசோதா சடப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- இம்மசோதாவின்படி கள்ளச்சாராயம் வழக்குகளில் ஏற்படும் மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு ஆயுள்தண்டனை மற்றும் 10 லட்சம் வரை அபதாரம் பெறப்படும்.
- தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் – 1937
எம்-சாண்ட் உற்பத்தி ஆலை
- எம்-சாண்ட் உற்பத்தி ஆலையானது (M-Sand Manufacturing Plant) ஆலங்குளத்தில் அமைய உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ஆலங்குளத்தில் தமிழக அரசு சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.
பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்
- 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்கள் வருங்காலத்தில் தொழில் தொடங்க ஆர்வத்தை உருவாக்க பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பாதம் பாதுகாப்பு திட்டம்
- பாதம் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின்படி Foot Screening Center ஆரம்ப சுகாதார மையங்களில் தொடங்கப்பட உள்ளது.
- மேலும் 100அரசு மருத்துவமனைகளிலும், 21 தலைமை மருத்துவமனைகளிலும் Foot Clinic தொடங்கப்பட உள்ளது.
- மேலும் 15 தலைமை மருத்துவமனைகளிலும் Diabetic Foot Surgery தொடங்கப்பட உள்ளது.
விக்ரம் மிஸ்ரி
- இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிறுத்தை சஃபாரி
- தென்னிந்தியாவின் முதல் சிறுத்தை சஃபாரி யானது கர்நாடாகாவின் பன்னர்கட்டா உயிரியில் பூங்காவில் (Bannerghatta Biological Park) ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்கட்சித் தலைவர்
- அடல்பிகாரி வாஜ்பாய் எதிர்கட்சிதலைவராக இருந்து பிரதமராகியுள்ளார்.
- இந்தியாவின் பிரதமரான ஓரே எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் ஆவார்.
காமன்வெல் சிறுகதை பரிசு 2024
- சஞ்சனா தாக்கூருக்கு 2024 ஆண்டிற்கான காமன்வெல் சிறுகதை பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ரவி அகர்வால்
- மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய தலைவராக ரவி அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரிம் ஆஃப் தி பசுபிக் (Rim of The Pacific)
- உலகின் மிகப்பெரிய கடல்சார் பயிற்சியான ரிம் ஆஃப் தி பசுபிக் (Rim of The Pacific) ஹவாய் தீவில் நடைபெற்றுள்ளது.
வியன்னா
- உலகளாவிய வாழ்வாதாரக் குறியீடு 2024-ல் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா முதலிடம் பிடித்துள்ளது.
கார்பன் வரி
- டென்மார்க் நாடானது கால்நடைகள் மீது கார்பன் வரி விதிக்கப்பட்டுள்ளது.
- உலகிலேயே கால்நடைகள் மீது கார்பன் வரி விதித்த முதல் நாடு
சிங்கப்பூர்
- நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது.
சாம்பியன் பட்டம்
- 2024 ஆண்டிற்கான டி20 சாம்பியன் பட்டத்தினை இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.
- மேலும் இந்திய அணி டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் அதிக ரன்கள் (176 ரன்கள்) அடித்து சாதனை படைத்துள்ளது.
சாம்பியன் பட்டம்
- டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வினை அறிவித்துள்ளனர்.
முக்கிய தினங்கள்
தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) – ஜூன் 29
- கருப்பொருள்: Use of data for decision making
சர்வதேச பாராளுமன்ற தினம் (International Day of Parliamentarism) – ஜூன் 30
- கருப்பொருள்: “Parliamentary diplomacy: Building bridges for peace and understanding”
உலக சமூக ஊடகங்கள் தினம் (Social Media Day) – ஜூன் 30
சர்வதேச சிறுகோள்கள் தினம் (World Asteroid Day) – ஜூன் 30