Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th and 28th October

Daily Current Affairs

Here we have updated 27th and 28th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கணியன் பூங்குன்றனார் விருது

Vetri Study Center Current Affairs - Kanyan Boongrunnar Award

  • அறிவியல், தமிழர், மருத்துவம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக அயலக தமிழகர்களுக்கு வழங்கப்படும் கணியன் பூங்குன்றனார் விருதானது 13 பேருக்கு வழங்கப்பட்டது.

காற்றின் தரக் குறியீடு

  • மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட காற்று தரக் குறியீட்டில் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
  • ராமநாதபுரம் 4வது இடத்தையும், மதுரை 7வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஐஐடி மெட்ராஸ்

  • ஜெர்மெனியின் த்ரெஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஐஐடி மெட்ராஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • ஜெர்மெனியின் பிரதமர் ஒலாப்கோல் இந்தியாவுடன் 18 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவ காப்பீடு திட்டம்

  • 70வயதிற்கு மேற்பட்ட மருத்துவ காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா திட்டமானது அக்டோபர் 29-ல் தொடங்கப்பட உள்ளது.

சூரிய சக்தி கூட்டணி

  • சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் (ISA) 6வது கூட்டமானது புதுதில்லியில் நடைபெற உள்ளது.
  • ISA (International Society of Automation) – 28.04.1945

நிதி ஒதுக்கீடு

  • உலக வங்கி நடத்தும் G20 தொற்றுநோய் நிதியம் இந்தியாவிற்கு ரூ.25 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
  • இந்நிதியம் கால்நடைகளின் உடல் நலத்தை பாதுகாக்க 2022-ல் உருவாக்கப்பட்ட G20 தொற்றுநோய் நிதியத்தின் தலைவராக இந்தோனேசியா இருந்தது.
  • கால்நடைகளை பாதுகாப்பதன் மூலம் கால்நடைகள் மூலம்  பரவும் நோயிலிருந்து மனிதர்களை பாதுகாக்க முடியும்.

கால்நடை கணக்கெடுப்பு

  • 21வது கால்நடை கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட உள்ளது.
  • கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

இயற்கை பாதுகாப்பு குறியீடு

  • உலகளாவிய இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 176வது இடம் பிடித்துள்ளது.

தலைமைத்துவ உச்சி மாநாடு

  • அசாமில் தலைமைத்துவ உச்சி மாநாடு 2024 நடைபெற உள்ளது.

முதல் எழுத்தாளர் கிராமம்

  • இந்தியாவின் முதல் எழுத்தாளர் கிராமம் உத்திரகாண்டின் தானோவில் திறக்கப்பட்டுள்ளது.

E-Coli

  • மனித மற்றும் விலங்குகள் குடலில் உருவாகும் E-Coli நோய் அமெரிக்காவில் பரவி வருகிறது.
  • E-Coli நோய் தூய்மையற்ற நீரினால் பாக்டீரியாவால் பரவுகிறது.

எஃகு சங்கம்

Vetri Study Center Current Affairs - Narendran

  • நரேந்திரன் உலக எஃகு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புத்தகம்

  • ரதன் டாடாவை பற்றிய ரதன் டாடா எ லைஃப் (Ratan Tata: A Life) என்ற புத்தகத்தை தாமஸ் மேத்யூ எழுதியுள்ளார்.

Miss Grand  International 2024

  • பஞ்சாப்பினை சேர்ந்த ரேச்சல் குப்தா Miss Grand  International-2024 பட்டத்தினை வென்றுள்ளார்.

அதிக விக்கெட்

Vetri Study Center Current Affairs - Ravichandran Ashwins

  • ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
  • இவர் 39 விளையாட்டுகளில் விளையாடி 188 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

FIFA தரவரிசை

  • அர்ஜென்டினா நாடானது FIFA தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
  • இத்தரவரிசையில் இந்தியா 125வது இடம் பிடித்துள்ளது.

சுல்தான் ஜோஹர் கோப்பை

  • மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் ஜோஹர் கோப்பையின் ஹாக்கி போட்டி பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.

முக்கிய தினம்

காலாட்படை தினம் (Infantry Day) – அக்டோபர் 27

சர்வதேச அனிமேஷன் தினம் (International Animation Day) – அக்டோபர் 28

Related Links

Leave a Comment